அழியாத தடங்கள்
வி. ரி. இளங்கோவன்
அழியாத தடங்கள்
வி. ரி. இளங்கோவன்
முன்னுரை
இந்நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் யாவும் அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கேற்ப என் மனதில் ஏற்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடாக எழுதப்பட்டவையாகும். இவை அவ்வப்போது பத்திரிகைகள் - சஞ்சிகைகள் - இணையத்தளங்களில் பிரசுரமாகின. இவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகள் சில இடப்பெயர்வு - புலப்பெயர்வு நடவடிக்கைகளால் தொலைந்தும் போயின், எஞ்சிய ஒரு சில ஊரில் கறையானுக்கும் இரையாகிச் சிதைந்து ஒன்றிணைக்க முடியாமற் போனதுமுண்டு. கிடைத்த சிலவற்றுடன் அண்மைக்காலத்தில் எழுதியவையும் சேர்ந்து இந்நூல் உருவாகிறது.
சமூகத்தில் பல தளங்களில் அன்று பணியாற்றிய, என் மனதில் இடம்பிடித்த மனிதர்கள் - பெரியவர்கள் - நண்பர்கள் சிலர் குறித்து யான் எழுதி வெளியாகிய கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து மண்மறவா மனிதர்கள் என்ற நூலினைக் கடந்த வருடம் வெளியிட்டிருந்தேன்.
ஈழந்து இலக்கியப் பரப்பிலும், குறிப்பாகப் புலம்பெயர் இலக்கியப் பரப்பிலிருந்தும் இலக்கிய வரலாறு குறித்த ஞானம் சிறிதுமின்றி, இலக்கியப் பயிற்சியற்று, மொழி ஆளுமைக்கான கற்றறிதல் ஏதுமின்றி, குறுகிய காலத்தில் குறுக்குவழி புகுந்து, கேவலமான நடவடிக்கைகள் மூலம் பட்டங்கள் - பரிசுகளுக்கும், பாரட்டுகளுக்கும் அலையும் ஒரு சிலரின் போக்குகளால் எம் இலக்கியத்துறைக்கு ஏற்படும் இழுக்குகளைக் காணநேர்கையில் நெஞ்சு பொறுக்குதில்லை.
பொய்யும் புழுகும் சுமந்து அடிவருடித் தொழுது புகழ் தேட நினைக்கும் இந்தப் பிற்போக்குப் பித்தர்கள் எழுதத் தொடங்கியவுடனேயே ஏதோ சாதனையாளர்கள் என்று பித்தம் தலைக்கேறச் சுற்றிவருகிறார்கள். குறுக்குவழியில் தேடிய பணத்தால் எல்லாவற்றையும் வாங்கிவிடலாமென அலைகிறார்கள்.
அழியாத தடங்கள் பதித்து அரும் பணியாற்றும் மனிதர்கள் மத்தியில் அற்பர்களும் உலாவருவது காலத்தின் கோலம் போலும்.!
ஒவ்வொரு துறையிலும் - விடயத்திலும் அழியாத தடங்களை நாம் அறிந்துகொள்ள முடியும்.!
இன்றைய உலகில், தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்கிற ஏகாதிபத்தியச் சுரண்டல் காரர்களின் கோரப்பிடிக்குள் சிக்கித்திணறும் சாதாரண உழைக்கும் மக்களைச் கண்டு கொள்ளாமல், அந்தப் பேரழிவுக்காரர் களுக்கு சேவகஞ் செய்யும் வகையில் சமூக, இன முரண்பாடுகளைச் கூர்மைப்படுத்தி அழிவுகளுக்கு ஆட்படுத்தத் துணைபோகும் படைப்புகளைக் கூலிக்கும், பேருக்கும் புகழுக்கும் பட்டங்களுக்கும் அலைபவர்கள் விதைக்கிறார்கள்.
அழியாத தடங்களாக மக்கள் மனதில் என்றும் நிலைப்பனவற்றை, போலிகளை இனங்கண்டு ஒதுக்கி, மக்களுக்கான படைப்புகளை வரவேற்று ஊக்கப்படுத்த
மக்கள் முன்வரவேண்டும்.
- வி. ரி. இளங்கோவன் 10 - 1 O - 2012
பிரான்ஸ்.
பத்திரிகைத்துறையில் ஓர் சாதனை மாது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சில வருடங்களுக்கு முன்பு (2000) ஞாயிறு தினக் குரல் பத்திரிகையில் தோழர் ‘பாரதிநேசன் வீ. சின்னத்தம்பி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். “கம்யூனிஸ் இயக்க வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள்’ என்பது அக்கட்டுரையாகும். அடுத்த ஆண்டு அவர் காலமாகிவிட்டார். அவரது நினைவாக அக்கட்டுரையைச் சிறு நூலாக யான் வெளியிட்டேன்.
அக்கட்டுரையில் வேதவல்லி கந்தையா, தங்கரத்தினம் கந்தையா, பரமேஸ்வரி சண்முகதாசன், வாலாம்பிகை கார்த்திகேசன், பிலோ மினம் மா டானியல் ஆகிய பெண் மணிகளின் பணிகள் குறித்துச் சுருக்கமாக விளக்கியிருந்தார். இப்பெண்மணிகளையும் அவர்தம் பணிகளையும் யான் நன்கறிவேன். அவர்களது பணிகள் மெச்சத்தக்கவை தான்.
பாடசாலைக் காலத்திலிருந்தே மூத்த சகோதரர்களைப் பின்பற்றி கலை இலக்கிய, அரசியல் துறைகளில் யான் ஈர்ப்புக்குள்ளானேன். அக்காலத்திலேயே யானும் மேடையேறத் தொடங்கினேன். அறுபதுகளின் முற்பகுதியிலிருந்தே பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்களோடு பழகும் வாய்ப்புகள் எற்பட்டன.
அன்று சிறந்த பெண் பேச்சாளர்களாக வடபகுதியில் பண்டிதை சத்தியதேவி துரைசிங்கம், பண்டிதை பொன் பாக்கியம், பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, புஸ்பா செல்வநாயகம், வேதவல்லி கந்தையா, உருத்திரர் கந்தசாமி ஆகியோர் விளங்கினர். இவர்களது பேச்சுக்களைக் கேட்கவும், இவர்கள் சிலரோடு மேடையேறும் சந்தர்ப்பமும் அன்றே எனக்கு வாய்த்தது.
அந்த காலம் முதல் இன்றுவரை எழுத்துத்துறையில் குறமகள், யாழ்நங்கை - அன்னலட்சுமி இராஜதுரை, புதுமைப்பிரியை - பத்மா சோமகாந்தன், ந. பாலேஸ்வரி, சிதம்பரபத்தினி, குந்தவை - சடாட்சரதேவி, பவானி ஆழ்வாப்பிள்ளை, ரூபராணி யோசேப், இராஜம் புஸ்பவனம், தமிழ்ப்பிரியா, யோகா பாலச்சந்திரன், அருண் விஜயராணி, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மண்டைதீவு கலைச்செல்வி, கோகிலா மகேந்திரன், செளமினி, மண்டூர் அசோகா, சிவ மலர் செல்லத்துரை, தாமரைச்செல்வி, ஆதிலட்சுமி இராசதுரை, நயிமா சித்திக், சந்திரா தியாகராசா, சந்திரா தனபாலசிங்கம், யோகேஸ்வரி சிவப்பிரகாசம், சிவயோகமலர் ஜெயக்குமார், ஆனந்தி, கவிதா, கெக்கிராவ ஸகானா, ராணி சீதரன் ஆகியோருட்படப் பல பெண் எழுத்தாளர்களை அறிந்திருக்கிறேன்.
அவர்களில் ஒரு மூத்த பெண் படைப்பாளி பத்திரிகைத்துறையில் 48 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வருவது உண்மையில் மெச்சத்தக்க சாதனையாகும். ஆமாம். அவர் தான் யாழ்நங்கை என்ற பெயரில் அன்றுதொட்டுப் பல படைப்புகளைத்தரும் மூத்த ப்ெண் படைப்பாளி அன்னலட்சுமி இராஜதுரை.
இன்று எத்தனையோ இளம்பெண்கள் சிறந்த படைப்பாளிகளாக, பத்திரிகையாளர்களாக விளங்குகிறார்கள். சர்ச்சைக்குரிய விடயங்களையும் துணிச்சலோடு எழுதுகிறார்கள். பெண்ணியம் பேசுகிறார்கள். ஆனால் அன்று ஓர் இளம் பெண் படைப்பாளியாக விளங்கியதோடு, துணிச்சலோடு பத்திரிகைத்துறையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டு பணிபுரிய முன்வந்தமை முற்போக்கானதும் பாராட்டுக்குரியதுமாகும்.
1959-ம் ஆண்டு 'கலைச்செல்வி சஞ்சிகை இவரை இளம் எழுத்தாளர் என அறிமுகப்படுத்தியது. 1962-ம் ஆண்டு முதல் வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தில் உதவி ஆசிரியராகப் பணியை ஆரம்பித்தார். பத்திரிகைத்துறை, ஆங்கிலம் ஆகியவற்றில் டிப்ளோமா தேர்ச்சிச் சான்றிதழ்கள் பெற்றுக்கொண்டவர். ஒவியத்துறையிலும் ஆசிரியர் தரரதரப் பத்திரம் பெற்றுக்கொண்டவரென அறியமுடிகிறது.
சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம் என எழுத்துத் துறையில் தடம் பதித்தார். கலைச்செல்வி, சிரித்திரன், வீரகேசரி மற்றும் சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதிவந்தார். இலங்கை வானொலியில் மகளிர் நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்தார். அவ்வப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகிறார்.
நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுதி), உள்ளத்தின் கதவுகள் (நாவல்), விழிச்சுடர் (குறுநாவல்) இருபக்கங்கள் (கவிதைத் தொகுதி) என்பன இவரது படைப்புகளாகும்.
மணிலா, பீஜிங் நகரங்களில் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்ட அனுபவங்களை வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராகப் பல வாரங்கள் எழுதிப் பாராட்டுப் பெற்றார்.
இவரது பணிகளைப் பாராட்டி இந்துக் கலாசார அமைச்சு 1992-ம் ஆண்டு தமிழ் மணி விருது வழங்கிக் கெளரவித்தது.
சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993-ம் ஆண்டு எஸ்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை, அன்றைய ஜனாதிபதி டி.பி. விஜயதுங்க மூலம் இவருக்கு வழங்கிக் கெளரவித்தது.
கொழும்பு தமிழ் இளைஞர் கலாசாரக் கூட்டமைப்பு, தென்கிழக்கு ஆய்வு மையம், கொழுப்பு கலைச்சங்கம் என்பனவும் இவரது பணிகளைப் பாராட்டிக் கெளரவித்துள்ளன. 'மல்லிகை சஞ்சிகை அட்டையில் இவரது படத்தைப் பிரசுரித்து, இலக்கிய வரலாற்றில் பெருமை சேர்த்தது.
இலங்கை எங்கும் நடைபெறும் பல்வேறு மகளிர் நிகழ்ச்சிகள், இலக்கியக் கருத்தரங்குகள், உரையரங்குகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள் யாவற்றிலும் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றார்.
சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல், விமர்சனம், மொழிபெயர்ப்பு, பத்திரிகைத்துறை என அனைத்திலும் சிறப்புற்று விளங்கும் இவருக்குக் கணவர் திரு. இராஜதுரை உறுதுணையாக என்றும் உதவி வருவது முன்மாதிரியானதாகும்.
கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே வீரகேசரி நிருபராக நியமனம் பெற்ற யான், அன்று வீரகேசரி நிருபர்களுக்கான கருத்தரங்கு - ஒன்று கூடலுக்கென அங்கு செல்லும் போதெல்லாம் இவரைப் பார்த்திருக்கிறேன் - பேசியிருக்கிறேன். இலக்கியக் கூட்டங்களிலும், வானொலியிலும் அவரது குரலைக் கேட்டுள்ளேன்.
பத்திரிகை அலுவலகத்தில் மிக அமைதியாகத் தனது பணியில் மூழ்கியிருப்பார். கதைத்தால் புன்முறுவலோடு ஒரிரு வார்த்தைகளில் பதில் சொல்வார்.
தற்போது, வீரகேசரி நிறுனம் வெளியிடும் கலைக்கேசரி சஞ்சிகையின் பொறுப்பாசிரியராகக் கடமையாற்றுகிறார்.
கலைக்கே சரியைத் தொடர்ந்து பெற்று வருகிறேன். வடிவமைப்பிலும், விடயதானங்களின் உள்ளடக்கத்திலும் கன்தியான, அழகான சஞ்சிகையாகக், கலாசாரப் பண்பாட்டு, ஆய்வு இதழாக கலைக்கே சரி வெளிவந்து இவரது ஆளுமையை வெளிப்படுத்துகிறது. தமிழகத்தில் கூட இத்தகைய இதழ் வெளிவருவதில்லை.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில், பல வருடங்களுக்குப் பின் இவரைச் சந்தித்தேன். “சிற்றிதழ்கள் அரங்கில் கட்டுரை சமர்ப்பித்துப் பேசுவதற்காக இருந்தேன். ஆரம்பமாக ஒரு சில நிமிடங்களேயிருந்தன. முன் வரிசையில் இவர் அமர்ந்திருந்தார். அருகில் சென்று வணக்கம் சொன்னேன்.
இளங்கோவன் எப்படி? பிரான்ஸ் நாட்டில் இருக்கிறாய். இல்லையா? முன்னர் மெல்லிய ஆளாக. அழகாக. இருந்தாய். இப்ப. என்ன. இப்படி?’ என்றார்.
வெளிநாட்டுச் சுவாத்தியம். வயதும் அறுபதாகிறது. என்றேன்.
‘அப்படியா. புன்னகைத்தார். ‘நல்லாயிரு. . என்று தாயுள்ளத்தோடு வாழ்த்தினார். மனது குளிர்ந்தது. அப்பால் நகர்ந்து மேடைக்குச் சென்றேன்.
சிறந்த பெண் படைப்பாளியாகப், பத்திரிகையாளராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்து சாதனை படைத்துவரும், பெண்ணினத்துக்குப் பெருமை சேர்க்கும் அந்தத் தாய் அன்ன லட்சுமி இராஜதுரை மேலும் பல்லாண்டுகள் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து பணிபுரியப் புலம்பெயர்ந்து வாழும் நாமும் வாழ்த்துவோமாக. ..!
- "கொழுந்து "இணையத் தளங்கள்’
பங்குனி - 2011
கலைத்தாகம் மிகக்கொண்ட கலையரசின் வாரிசு
நிர்மலா ரகுநாதன்.
ஆம். அன்று அப்படித் தான் இலங்கையில் அவரைக் கலை இலக்கியவாதிகள் குறிப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.
இன்று அவர் பவள விழா நாயகர். இலங்கையில் தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் முதன்முதலில் நம்பிக்கையூட்டிய படமாக, சிறந்த முறையில் அமைந்ததென பலராலும் போற்றப்பட்டது “நிர்மலா” திரைப்படமாகும்.
என் கல்லூரி நாட்களின்போது, நிர்மலா யாழ் ராஜா திரையரங்கில் வெளியானபோது அதனைப் பார்த்தேன். இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் சிறப்பாக வந்துள்ளதென நண்பர்களுக்குக் கூறினேன். பின்னர் நண்பர்களுடன் இரண்டாவது தடவையும் அதனைப் பார்த்தது இன்றும் ஞாபகம்.
ஆயிரம் தடவைகளுக்குமேல் மேடையேறிய, நடிப்பிசைக் கலாமணி வைரமுத்துவின் ‘மயான காண்டம்’ நாடகமும் நிர்மலாவில் இடம்பெற்றது ஞாபகம்.
இலங்கை வானொலி வர்த்தக சேவை ஒலிபரப்பில், அன்று இந்தியத் திரைப்பாடல்களையும் விஞ்சி, நேயர்களால் அதிகமாக விரும்பிக்கேட்கப்பட்ட, இலங்கைத் திரைப்பாடலான 'கண்மணி ஆடவா. என்ற பாடல் இடம்பெற்றதும் நிர்மலா படத்திலாகும். அப்பாடலை எழுதியவர் 'பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன்.
இவ்வாறு நம்பிக்கையூட்டிய நிர்மலா திரைப்படத்தைத் தயாரித்தும், அதில் நடித்தும் எம் மக்கள் மனதில் கலைஞனாக அழியாத இடத்தை ரகுநாதன் பெற்றுக்கொண்டார்.
மாணவப் பராயம் முதல் நாடக மேடையைக் கண்ட ரகுநாதன், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் வாரிசாக, பல நாடகங்களை இயக்கியும், நடித்தும் பாராட்டுக்கள் பெற்றிருந்தாலும், ‘கடமையின் எல்லை திரைப்படத்தில் பங்குபற்றியிருந்தாலும் நிர்மலாவுக்குப்பின் தான் அவர் இலங்கையெங்கும் பொதுமக்கள் மத்தியில் Lu J 6) 6MO T 595 அறியப்பட்ட, புகழ்பெற்ற கலைஞனாக மிளிர்ந்தார் என்று கூறலாம்.
அவர் நடித்த, வி.பி. கணேசனின் புதிய காற்று?, சினிமாஸ்கோப் திரைப்படமான ‘தெய்வம் தந்த வீடு' ஆகியவற்றையும் யான் பார்த்திருக்கிறேன். இருப்பினும் நிர்மலா தான் இலங்கைத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவர் பெயரைப் புகழுடன் சேர்த்துள்ளது எனலாம்.
இலங்கையெங்கும் கலைஞர்களின தொடர்புகளும் அவருக்கிருந்தது. போட்டி, பொறாமை மிகுந்தது கலையுலகம் என்பர் அந்தத் துறையில் நீண்ட காலம் தன் புகழையும், பெருமையையும் காப்பாற்றிக்கொண்டு காலூன்றி நிற்பது சிரமமானது. ஆனால் ரகுநாதன் இன்றுவரை இலங்கையில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து உலகமெங்கும் பரந்து வாழும் எம் மக்கள் மத்தியில் தன் அயரா உழைப்பினாலும், கலைப்பணியினாலும் போற்றத்தக்க முன்னோடிக் கலைஞனாக மதிக்கப்படுகிறார்.
இலங்கையில் நாடக, சினிமாக் கலைஞர்களுடன் மட்டுமல்ல, சிறந்த இலக்கியப் படைப்பாளிகளுடனும் அவர் இணைந்து பணியாற்றியுள்ளார். அவர் ஒரு படைப்பாளி, இலக்கிய நேசன்.
மக்கள் எழுத்தாளர் கே. டானியல், 'பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன் ஆகியோருடன் அவர் நட்புடன் பழகி வந்ததை யான் அறிவேன்.
1986-ம் ஆண்டு தை மாதம் 30-ம் திகதி, வைத்திய சிகிச்சையின் பொருட்டும், இலக்கிய நண்பர்களைச் சந்திப்பதற்காகவும் மக்கள் எழுத்தாளர் கே. டானியல் தமிழகம் , சென்றிருந்தார். உடல்நலம் குன்றியிருந்த அவரை யான் அழைத்துச்சென்றிருந்தேன். பேராசிரியர் அ. மார்க்ஸ் ஏற்பாட்டில் தஞ்சாவூரிலும், மதுரையிலும் சிகிச்சை பெற்றபின் சென்னை வந்தபோது, ‘சங்கர் நேத்திராலயா கண் மருத்துவமனையிலும் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இலக்கிய, அரசியல் நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதற்காகச் சென்னை எக்மோரில் ஒரு விடுதியில் தங்கியிருந்தோம். அப்போது எழுத்தாளர்கள், செ. கணேசலிங்கன், செ. யோகநாதன் ஆகியோர் வந்து டானியலைச் சந்தித்து உடல்நலம் குறித்து கவலையுடன் விசாரித்தனர். ஒய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் திடீரென இருவர் உள்ளே வந்தனர். கலைஞர் ரகுநாதன், ‘மக்கள் குரல் புனிதலிங்கம் ஆகியோரே வந்தனர். டானியலின் உடல்நலம் பாதிக்கப்பட்டமை குறித்து, தமிழகத்தில் தங்கியிருந்த ரகுநாதன் எப்படியோ அறிந்து புனித லிங்கத்தையும் அழைத்துக்கொண்டு அங்கு வந்திருந்தார். கவலை மிகுந்தவராக, உடல்நலத்தில் கவனம் செலுத்துமாறும் மற்றும் இலக்கிய முயற்சிகள் குறித்தும் டானியலுடன் அவர் நீண்ட நேரம் நட்புரிமையுடன் உரையாடிக்கொண்டிருந்தமை இன்றும் எனக்கு ஞாபகம். எழுத்தாளர்கள், நண்பர்கள் மீது ரகுநாதன் கொண்டிருந்த நேசம், பாசம், மனிதாபிமானத்தை என்னால் உணர முடிந்தது. அவர் சென்றபின் டானியலிடம் ரகுநாதனின் சினிமா முயற்சி பற்றிக் கேட்டேன். டானியல் சொன்னார். “இலங்கையில் நாடகம், சினிமா, கலையென தாகம்கொண்டு தன் ர வாழ்க்கையையே அர்ப்பணிச்சுக்கொண்டு திரிஞ்ச மனுசன். இங்கையும் அந்த அலுவல் தான் பார்த்துக் | கொண்டு நிற்கிறார் | போல. . ஆனால் இங்க |
சுத்துமாத்து நிறைஞ்ச இந்தச் சினிமாப் பெரும்சமுத்திரத்தில உண்மையா கலைத்தாகம் கொண்டவனால நிண்டுபிடிக்கிறது கஸ்ரம். ரகுநாதன் என்ன செய்யப்போறாரோ தெரியாது. .” கவலையோடு தான் சொன்னார் தமிழக சினிமா அப்படிப்பட்டது தான் என ரகுநாதன் உணர்ந்துகொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
ரகுநாதன் புலம்பெயர்ந்து இங்கு வந்த ஆண்டில் தான் நானும் பாரிஸ் வந்திருந்தேன். அன்று அவரை நண்பர் எஸ். கே. ராஜென் வீட்டில் பலமுறை சந்தித்துக் கலை இலக்கிய முயற்சிகள் குறித்து உரையாட முடிந்தது. அவரது சுறுசுறுப்பும் திடகாத்திரமான நிமிர்ந்த நடையும், பேச்சும், கலை இலக்கிய நேசிப்பும் எனக்கு வியப்பளிப்பன.
1991-ம் ஆண்டு நடைபெற்ற எனது ‘கரும்பனைகள் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துக்கவிதையும் தந்து சென்றார். பின்னரும் எனது நூல் வெளியீட்டு வைபவங்களிலும் சரி, வேறு கலை இலக்கியக் கூட்டங்களிலும் சிரி அவர் கலந்துகொண்டு ஊக்கமளித்துச் சிறப்பித்து வருவது மனங்கொள்ளத்தக்கது.
இன்று வரை தளராத ஊக்கமுடன் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கலைஞர்கள் பலரோடும் உறவுகளைப்பேணி, சின்னத்திரைக்கான படங்களைத் தயாரித்தும், இயக்கியும் நடித்தும் வருவதோடு, தனது அனுபவங்கள் மூலம் பெற்றதை இளந்தலைமுறைக் கலைஞர்களுடன் பகிர்ந்துகொண்டு, நெறிப்படுத்தியும் ஊக்கமளித்தும் வருகின்ற ைம போற்றுதற்குரியது.
பவள விழாக் காணும் மூத்த கலைஞனை, முன்னோடியை, கலைத்தாகம் மிகக்கொண்ட கலை இலக்கிய நேசனைப் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துவோமாக..!
. - மல்லிகை
2O1 O
சென்னை சி. எல். எஸ். கருத்தரங்கும் பயனுள்ள சந்திப்புகளும்.!
உலகத்தமிழ் மாநாடு நடைபெற்று முடிந்த அடுத்த கிழமை சென்னையில் மற்றொரு பயனுள்ள கருந்தரங்கு நடைபெற்றது. சென்னை கிறிஸ்தவ இலக்கிய சங்கத்தினர் (சி.எல்.எஸ்.) நடத்திய இக்கருத்தரங்கு ஜனவரி 17, 18-ம் (1981) திகதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்துகொள்ளுமாறு கிடைத்த அழைப்பை ஏற்றுத் தோழர் டானியலுடன் 16-ம் திகதி மாலை கொழும்பிலிருந்து விமான மூலம் சென்னை சென்றேன்.
பன்னிரண்டாவது எழுத்தாளர் - வாசகர் கருத்தரங்காக இம்முறை நடைபெற்ற இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே. “தற்காலத் தமிழ் இலக்கியத்தில் வறுமையும், சாதியியமும்’ என்னும் பொருளில் கருத்தரங்கு நடைபெறவிருப்பதும், கருத்தரங்குப் பொருளையே கருவாகக் கொண்டு என்றென்றும் இலக்கியப் பணி புரியும் தோழர் டானியலின் பஞ்சமர்’ நாவல் தனியோர் அமர்வில் ஆய்வு செய்யப்படவிருப்பதுமே எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன.
சி.எல்.எஸ். பிரதிநிதி பொன்னுத்துரை எம்மை அழைத்துச் செல்ல வாகனத்துடன் சென்னை விமான நிலையம் வந்திருந்தார். சி.எல்.எஸ். விடுதியகத்தில் எமக்கு உணவு, இருப்பிட வசதிகள் யாவும் செய்யப்பட்டிருந்தன. ஒரு தேநீரைக்கூட வெளியில் காசு கொடுத்து அருந்தத் தேவையற்ற விதத்தில் விருந்தோம்பும் பண்பு சிறப்பாக இருந்தது.
கருத்தரங்கு 17-ம் திகதி காலை 9 மணிக்கு அமைப்பாளர் திரு. தி. பாக்கியமுத்துவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி கா. சிவத்தம்பி கருத்தரங்கைத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில், தற்காலத் தமிழ் இலக்கியங்களில் வறுமையும், சாதியியமும் நன்கு சித்திரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டு இன்றைய இளந் தலைமுறையினர் இவ்விடயத்தில் நன்கு கவனம் செலுத்தி வறுமையையும், சாதியியத்தையும் ஒழிக்க சமூக மாற்றத்தை வேண்டி நன்முறையில் எழுதுவது நம்பிக்கையளிக்கக் கூடியது என்றார்.
கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், இந்தியப் பிறமொழி இலக்கியங்கள், நாவல்கள் அன்று - இன்று, பஞ்சமர்’ நாவல் ஆகியன ஒவ்வொன்றும் ஒவ்வோர் அமர்வாக ஆய்வு செய்யப்பட்டன. கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டு, விளக்கங்கள் அளிக்கப்பட்டு, கலந்துரையாடல்களும் நடைபெற்றன.
முதல் அமர்வில் டாக்டர் தயானந்தன் பிரான்சிஸ் கவிதைகள் குறித்துக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். தற்காலக் கவிதைகளில் வறுமையும், சாதியியமும், எவ்வளவுக்கு எடுத்தாளப்பட்டிருக்கின்றன என்பதை நன்கு விளக்கினார். பாரதியிலிருந்து பொன்ன டியான் வரை கவிதைகளைக் குறிப்பிட்டு விளக்கினார்.
அடுத்து இரண்டாம் அமர்வில் திரு. தி. க. சிவசங்கரன் தலைமையில் சிறுகதைகள் குறித்து திரு. டொமினிக் ஜீவா கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் தமது உரையில்,
சமூகத்தின் அடித்தளத்திலிருந்து பல்வேறு அடக்குமுறைகள், கொடுமைகளினால் பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உந்துதலின் காரணமாக அந்தக் கொடுமைகளைச் சாடி எழுத முற்பட்டதாகவும், அதற்காகவே தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாடகத்துறை வளர்ச்சி
நாடகங்கள் குறித்து திரு. கோமல் சுவாமிநாதன் தலைமையில் திரு. கு. சா. கிருஷ்ணமூர்த்தி உரையாற்றினார். அன்றைய காலகட்டத்தில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் நாடகங்களை எவ்வளவோ அடக்குமுறைகளுக்கு மத்தியில் மேடையேற்றிய அனுபவங்களையும் அடுத்து தொழிலாளர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து அவர்களின் பிரச்சினைகளைப் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் மேடையேற்றிய அனுபவங் களையும் நாடகத்துறையின் பொதுவான வளர்ச்சி குறித்தும் அவர் தமதுரையில் குறிப்பிட்டார்.
18-ம் திகதி காலை கேரளத் தமிழ் எழுத்தாளர் திரு. நீல பத்மநாபன் தலைமையில் திருமதி சரஸ்வதி ராம்நாத் இந்திய பிறமொழி இலக்கியங்கள் குறித்துக் கட்டுரை சமர்ப்பித்தார். இவ்வமர்வு ஒர் ஒப்பீட்டாய்வாக அமைந்து இலக்கிய இரசிகர்களின் பாராட்டுதலுக்கு உரியதாயிற்று. அடுத்து திருமதி ராஜம் கிருஷ்ணன் தலைமையில் திரு. ஆ. மாதவன் சுதந்திரத்திற்கு முந்திய நாவல்கள் குறித்துக் கட்டுரை சமர்ப்பித்தார். தற்கால நாவல்கள் குறித்து திருமதி சேதுமதி மணியன் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். இவர் இன்றைய குறிப்பிட்ட பல நாவல்களின் குறிப்புரைகளைத் தமது கட்டுரையின் பெரும்பகுதியில் குறிப்பிட்டிருந்தார். கலந்துரையாடலின் போது இது சபையோரின் வாய்க்கு பதமாயிற்று. பஞ்சமர் நாவல் பற்றி அடுத்த அமர்வில் ஈழத்து நாவலான கே. டானியலின் பஞ்சமர் நாவல் விசேடமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் பஞ்சமர்’ நாவல் குறித்துக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றும் பொறுப்பு என்மீது சுமத்தப்பட்டது.
கடந்த காலங்களில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நடைமுறையிலிருந்த சாதிப் பிரிவுகள், சாதிக் கொடுமைகள், அவற்றுக்கெதிரான போராட்டங்கள், ‘வாழ்க்கை நிலைமைகள் பேச்சுவழக்கு ஆகியவை குறித்தும் இவற்றுக்கும் நூலாசிரியர் டானியலுக்குமுள்ள தொடர்புகள், பங்களிப்புகள் குறித்தும் விளக்கிவிட்டு, கட்டுரையைச் சமர்ப்பித்தும் பேசினேன். பஞ்சமர் நாவலில் குறிப்பிடப்படும் சம்பவங்கள் கற்பனையல்லவென்றும், ஆசிரியரும் அக்கதாபாத்திரங்களில் ஒன்றி நிற்கிறார் என்றும் குறிப்பிட்டேன்.
அடுத்து தோழர் டானியல் கட்டுரை சமர்ப்பித்துப் பேசினார். ‘எழுத்து எனக்குத் தொழிலல்ல. சமூகக் கொடுமைகளுக்கு எதிராக, அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த போராட்டங்களில் என்னை ஒன்றிணைத்ததின் மூலம் அடைந்த அனுபவங்களையே புடமிட்டு நான் வழங்கி வருகிறேன். சுமார் முப்பது வருட காலமாக நான் ஏற்றுக்கொண்ட ஒர் அரசியல் பாதையில் நடந்து, எனது அரசியல் நோக்கிற்கு ஒரு கருவியாகவே இலக்கியத்தை உபயோகித்து வருகிறேன். தனி மனிதனுக்கான சகல சுதந்திரங்களையும் அழித்து, எல்லோருக்கும் எல்லாமான சுதந்திரத்தைப் பெறுதல் என்ற இலட்சியத்தை ஏற்று எழுதுகிறேன்’ என்று அவர் தமது பேச்சில் குறிப்பிட்டார்.
கலந்துரையாடலின்போது பலர் பஞ்சமர் நாவலையும் அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளையும், பேச்சுக்களையும் பாராட்டினர். நீல பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற அமர்வும், பேராசிரியர் சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற 'பஞ்சமர் நாவல் அமர்வுமே சபையோரின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன; சிறப்படைந்தன. தி. பாக்கியமுத்துவின் நன்றியுரையுடன் கருத்தரங்கு இனிது முடிவுற்றது.
கடந்த பன்னிரண்டு வருடங்களாக ஒவ்வொரு பொருளில் இத்தகைய கருத்தரங்கினை நடத்திவரும் கிறிஸ்தவ இலக்கியக் குழு நண்பர் வட்ட அமைப்பாளர் பாக்கியமுத்துவின் அயராத முயற்சி எல்லோரினதும் பாராட்டுதலைப் பெற்றது.
திருவாளர்கள் சி. சு. செல்லப்பா, விஜயப்ாஸ்கரன், சிதம்பர ரகுநாதன், கண. முத்தையா, சோ. சிவபாதசுந்தரம், பேராசிரியர். சஞ்சீவி, அசோகமித்திரன், செந்தில்நாதன், சு. சமுத்திரம், அக்கினிபுத்திரன், மலர்மன்னன், ரவீந்திரதாஸ், பாப்பிரியா, பசு. கெளதமன் ஆகியோர் உட்பட மற்றும் பல எழுத்தாளர்கள், இலக்கிய ரசிகர்களையும் இக்கருத்தரங்கில் சந்திக்கும் வாய்ப்புக்கிட்டியது.
கட்டுரைகள் தொகுப்பு
ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் சி.எல்.எஸ்-இன் பணியினைப் பாராட்டிவிட்டு, பயனுள்ள இலக்கியக் கருத்தரங்கில் கலந்துகொண்ட இனிய நினைவுகளுடன் புறப்பட்டோம்.
எழுத்தாளர்கள், இலக்கிய ரசிகர்கள், விடுதலை விரும்பிகள் பலரது வேண்டுகோளுக்கிணங்க சென்னையில் பல இடங்களுக்கும் சென்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டோம். அடுத்து எழுத்தாள நண்பர்கள் பிரகாஷ், பசு. கெளதமன் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தஞ்சாவூர் சென்றோம். நஞ்சை கொஞ்சும் தஞ்சைத் தரணியில் கீழ்வெண்மணி உட்படப் பல கிராமங்களுக்கும் சென்று விடுதலை விரும்பிகள், பிற்பட்ட மக்களோடு கலந்துரையாடினோம். தோழர் டானியல் அந்த மக்களின் வாழ்க்கை நிலைமைகளை, போராட்டங்களை அறிந்து கொள்வதிலேயே முழுநேரத்தையும் செலவிட்டார். அடுத்து, புதுக்கோட்டை எழுத்தாள நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பின் பேரில் புதுக்கோட்டை சென்றோம். அங்கும் பல இலக்கிய நெஞ்சங்களை விடுதலை விரும்பிகளைச் சந்தித்து உரையாடினோம்.
பதினைந்து நாட்களின் பின் இராமேசுவரம் வழியாக வழமையான பலவித சிரமங்களையும் அனுபவித்து நாடு திரும்பினோம். இந்தக் கப்பல் பிரயாண அவலங்கள் குறித்து ஒரு நூலே எழுதிவிடலாம். இருப்பினும் பயனுள்ள விட்யங்கள் இந்த அவலங்களையெல்லாம் விஞ்சி இனிய நினைவுகளாக மனதில் நிறைந்துள்ளன.
- 'தினகரன் வாரமஞ்சரி’
*சிந்தாமணி, - பங்குனி - 1981
சீனாவில் இன்று என்ன நடக்கிறது?
07-09-1980 மா-ஒ மறக்கப்பட்டு விட்டாரா அன்றி மறைக்கப்படுகிறாரா?
சீனாவில் 1966-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புரட்சி மகத்தான கலாசாரப் புரட்சியென்று உலகெங்கு முள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளால் (சீனச் சார்பு) எடுத்துச் சொல்லப்பட்டது.
அந்தக் காலத்தில் அங்கு அடித்தள - கிராமம் தொட்டு ஆட்சி அதிகாரபீடம் வரை மாற்றங்கள் நிகழ்ந்தன. பழைய நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சித்தாந்தத்தையும், பழக்க வழக்கங்களையும், கலாசாரத்தையும் வேரோடு பிடுங்க முயற்சிக்கும் ஒரு புரட்சியென்றும், அது உலகம் என்றும் கண்டிராத அறிவுக் கொந்தளிப்பென்றும் சொல்லப்பட்டது.
ஆட்சி, அதிகாரபீடம், பொருளாதாரம், தொழில் நுட்பம், கல்வி, பத்திரிகை, தொ ைல க் கா ட் சி , வானொலி, திரைப்படம், மதபீடம், பாடசாலை, ! கலை இலக்கியம், ! 99 (5 சாதனங்கள், ! உடைகள், சிகையலங் காரம், வீதிப்பெயர்கள் " ஆகிய சகல விடயங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. மாற்றங்கள் நிகழ்ந்தன.
கிறெம்ளின் செவ்வொளி அணைந்து விட்டது. தியென்அன்-மென் சதுக்கத்தின் சிவப்பு விளக்கு மென்மேலும் சிவப்பாகவும், பிரகாசமாகவும் துலங்குகிறது என உலகெங்குமுள்ள சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள் பிரசாரம் செய்தனர்.
ஆனால் மாஒ-சே-துங் மறைவுக்குப்பின் இன்று சீனாவில் நடப்பதென்ன?
கலாசாரப் புரட்சியினை முன்னின்று நடாத்திய தலைவர்களுட்பட (நால்வர் குழு) பல்லாயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். -
முன்னர் இரு தடவைகள் சகல பொறுப்புகளிலுமிருந்து விலக்கப்பட்ட டெங்-ஷியோ-பிங் இன்று வல்லமையுள்ள தலைவராகக் கணிக்கப்படுகிறார்.
கலாசாரப் புரட்சியின் போது விமர்சிக்கப்பட்டு தடைசெய்யப்பட்ட கலை இலக்கியப் படைப்புகள் மீண்டும் உலாவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிறநாட்டுத் தலைவர்கள், உல்லாசப் பிரயாணிகள் வந்து போக அனுமதி வழங்கப்படுகிறது.
உல்லாசப் பயணத்துறை வளர்க்கப்படுகிறது. நவீன ஹோட்டல்கள், ஆடம்பர பொழுதுபோக்கு நிறுவனங்கள், வெளிநாட்டு மூலதன வசதியோடு நிறுவப்படுகின்றன. இதற்கு ஹொங்கொங், சிங்கப்பூர் மாதிரிகள் பரீட்சிக்கப்படுகின்றன.
பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமிருந்து கோடிக் கணக்கான ரூபாய்களுக்கு ராணுவ போர் சாதனங்கள் பெறப்படுகின்றன.
மேற்கத்திய பாணியில் உடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவீன மோஸ்தர் உடைகளைத் தயாரிக்க பிரான்ஸ் நிறுவனங்கள் அனுமதி பெற்று அங்கு கிளைகளை நிறுவுகின்றன.
கைத்தொழில், விவசாயம், கல்வி, உத்தியோகம், ஏற்றுமதி, நன்கொடை, வெளியுறவு சம்பந்தமான மாஒவின் கொள்கைகள் கைவிடப்பட்டு புதியன அமுல்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கா, பாகிஸ்தான, சிலி ஆகிய நாடுகளுட்பட மற்றும் பல நாடுகளுடன் நெருங்கிய நட்புறவு வளர்க்கப்படுகிறது.
கடந்த வருடம் முதல் உத்தியோகபூர்வமாக மாஒவின் சிரார்த்த தினம் கொண்டாடப்படவில்லை. ஆனால் சூ-என்லாயின் சிரார்த்ததினம் அமர்க்களமாகக் கொண்டாடப்பட்டது.
இவ் வருடம் மாஒ வின் சிரார்த்த தினத்தை ஆயிரக் கணக்கான விவசாயிகள் தியென்-அன்-மென் சதுக்கத்தில் கூடிக் கொண்டாடினர். ஆனால் அரசு இதுபற்றி அக்கறை செலுத்தவில்லை.
கடந்தமுறை சீன தேசியதினம் கொண்டாடப்பட்டபோது மாஒவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. சீனத்தலைவர் ஹ" வா ஹ" வாபெங் பேசும் போதும் இது பற்றிக் குறிப்பிடவில்லை.
1969-ஆம் ஆண்டு நடைபெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 9-வது தேசியக் காங்கிரஸால் தேசத்துரோகி,
கருங்காலி, முதலாளித்துவப் பாதையாளன் என வர்ணிக்கபட்ட லியு-செள-சி, இன்று மாபெரும் மார்க்ஸிஸ்ட் எனப் புகழப்படுவதுடன், அவருக்கு நினைவு தினக் கூட்டங்களும், மலர் வெளியீடுகளும் நடாத்தப்படுகின்றன. கட்சி அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த காலங்களில் மாபெரும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன வென்றும் அவை யாவற்றுக்கும் மாஓசே-துங்கே பொறுப்பு என்றும் சீனத்தலைவர் ஹ" வா ஹ" வாபெங் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.
பொது இடங்களிலுள்ள மாஒவின் உருவப் படங்கள், மாஒவின் சிந்தனை வாசகங்கள் அகற்றப்படுகின்றன.
சதிகாரர், கிளர்ச்சிக்காரர் எனக் குற்றஞ்சாட்டி பலர் அண்மைக் காலங்களில் மரண தண்டனை வழங்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆங்காங்கு விவசாயிகள் தொழிலாளரது வேலை நிறுத்தங்கள், சுவரொட்டி இயக்கங்கள், ஊர்வலங்கள், கிளர்ச்சிகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
இப்படிச் சீனா செல்கின்ற பாதையினை நோக்கும்போது, ரஷ்யாவில் குரு ஷ்சேவ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஸ்டாலின் நிராகரிக்கப்பட்டது போன்று இன்று சீனாவில் மாஒ நிராகரிக்கப்பட்டு விட்டாரா என்ற எண்ணமே தோன்றுகிறது.
இன்று சீனாவில் நடக்கும் இந்த மாற்றங்கள் உலகெங்கு முள்ள சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினரிடையேயும், ஆதரவாளர்களிடையேயும் ஆச்சரியத்தையும், வியப்பையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளன.
சில நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் மாஒவை ஏற்றுக் கொண்டு, இன்றைய சீனாவை முற்றாக நிராகரித்துள்ளன. அமெரிக்க புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் கட்சியென குறிப்பிடப்பட்ட சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினர், இரு வருடங்களுக்கு முன்பே இவ்வாறு சீனாவை நிராகரித்துள்ளனர். சில சில குழுக்கள் இன்றும் சீனாவை ஆதரிக்கின்றன. எப்படியிருப்பினும் சீனாவில் நடைபெறும் மாற்றங்கள் அரசியல் அவதானிகளுக்கு ஆச்சரியத்தைத் தான் கொடுக்கின்றன.
- ‘சிந்தாமணி”
O7 - O9 - 198O
கலாநிதிக்கு வி. தான்!
("லங்கா கார்டியன்’ ஆங்கிலச் சஞ்சிகையில் சமுத்திரன் எழுதிய கட்டுரையின் தாக்கத்தால் u6)f ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒப்பாரி வைக்கத் தொடங்கியுள்ளனர். கலாநிதி ஒருவர் தமிழ்ச் சஞ்சிகை யொன்றில் வைத்துள்ள ஒப்பாரியில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்துக்கு, அவ்விடயத்தோடு எலும்பும் - சதையும் - உயிருமாகவுள்ள ஒருவர் தனக்கே உரித்தான நகைச்சுவையுடன் சொன்ன பதில் . /
“சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பல சிறந்த படைப்புகள் உருவானதாகச் சிலர் மார்தட்டிக்கொள்கிறார்கள். அதில் சமுத்திரனும் சேர்த்தி ! ‘கந்தன் கருணை தான் இவற்றில் மகா காவியமாகப் போற்றப்பட்டதாக ஞாபகம். அந்த மேடைக் குதிப்பில் கலையுமில்லை கதைப்போக்கில் அரசியல் ஆழமுமில்லை; கலைக்கேயுரிய பட்டும்படாத தன்மை எங்கேயும் காணப்படவில்லை. தாசீசியஸ் அதை மெருகிட்டாராம் - இது பித்தளைப் பானைக்குப் புடமிட்ட கதைதான்” - இவ்வாறு ஒரு கலாநிதி எழுதியிருக்கிறார்.
என். கே. ரகுநாதனால் எழுதப்பட்ட கந்தன் கருணை மூலக்கதைக்கு தாசீசியஸ் மெருகூட்டுவதற்கு முன்பே ‘அம்பலத்தாடிகள் அதற்கு காத்தான கூத்துப்பாணியில் மெட்டமைத்து கிராமங்கள் தோறும் அதனை மேடையேற்றியுள்ளனர். அதன் உந்துதலுக்குட்பட்டு ஆயிரக்கணக்கானோர் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைமையின் கீழ் அணிதிரண்டதும், சாதி ஒழிப்பு நடவடிக்கைகளில் ஆங்காங்கே ஈடுபட்டதும், அதனால் வெடித்துக் கிளம்பிய போராட்டங்களும், பலாபலன்களும் கலாநிதி அவர்களுக்குத் தெரிந்திருக்க முடியாது தான் ! ஏனெனில் அவருக்கு ... !
ஒரு கலைவடிவம் மக்களுக்கு முன்னால் வைக்கப்படும் போது அதனால் வருவிக்கப்படும் பாதிப்புகளைக் கொண்டே அதன் சிறப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்ற சாதாரண உண்மையைத்தானும் கலாநிதியால் உணர முடியவில்லை என்றால் அவருக்கு நிட்சயமாக வி . தான் !
‘ஒரு விசரர்கள் விடுதி, அதற்குள் ஒரு கலாநிதியும் இடம்பெற்றிருந்தார். அந்தக் கலாநிதியைப் பார்த்துப் போக அவரின் பாலிய நண்பன் ஒருவன் வந்தான். உள்ளே வந்த அவன் தனது நண்பன் கலாநிதியை அணுகியபோது, அந்தக் கலாநிதி அழகழகான பூச்செடிகளுக்குத் தண்ணிர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது வந்த தனது பாலிய நண்பனிடம் தான் வளர்க்கும் அந்தப் பூச்செடிகளைப் பற்றியெல்லாம் பேசத் தொடங்கினார் கலாநிதி.
நண்பா, இதில் நான் 23 செடிகள் வளர்க்கிறேன். 9 ரோஜாக்கள், 8 சூரியகாந்தி, 6 செவ்வந்தி. இந்த 8 சூரியகாந்திச் செடிகளைத் தவிர ஏனையவைகளுக்கு நோய் பிடித்திருக்கிறது. அவைகளுக்குக் கிருமிநாசினி தெளிக்கா விட்டால் ஒரு வாரத்துக்குள் அவை வாடிச் செத்துவிடும். இதோ பார், இந்த 8 சூரியகாந்திச் செடிகளும் நோய்களைத் தாங்கக் கூடியவை இன்று அவைகள் மொட்டுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கின்றன. சரியாக எட்டாவது நாள் அவை மலர்ந்துவிடும். வேண்டுமானால் நீ வரும் திங்கட்கிழமை அதிகாலையோடு வந்துபார்.
அவை அன்று மலர்ந்து விடும் - என்று பேசி முடித்தபோது அந்தப் பாலிய நண்பன் அந்தச் சூரியகாந்திச் செடிகளைப் பார்த்தான். அவைகள் மொட்டுத் தள்ளி நின்றன. ஏனைய செடிகளின் அடிப்பாகங்களைப் பார்த்தான். அவைகளின் அடிப்பாக இலைகள் நோயினால் கருகிப்போயே இருந்தன. இப்படி நுணுக்கமான கணக்குகளைச் சொல்லும் தனது பாலிய நண்பனுக்கு எப்படி விசராக இருக்க முடியுமென்று அவன் எண்ணிக் கொண்டே கலாநிதியிடம் விடைபெற்றுத் திரும்பிய போது, நண்பா, கட்டாயம் நீ வரும் திங்கட்கிழமை வந்து இந்தச் சூரியகாந்திப் பூக்களைப் பார், அதன் அழகை நீ ரசிப்பாய் என்று மறுபடியும் திங்கட்கிழமையை ஞாபக மூட்டினார்.
வெளியே வந்த நண்பன், விடுதி அதிபரிடம் சென்று நிலைமையைக் கூறி கலாநிதிக்கு விசர் இல்லை என்றும் அவரை விட்டு விடும்படியும் கேட்டுக் கொண்டான்.
அவர் கூறும் கணக்குகள் பல சரிதான் ஆனாலும் அவருக்கு விசர் தான் - என்று அதிபர் எவ்வளவோ கூறியும் இதை நண்பனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இறுதியில் நண்பன், ‘நான் அடுத்த திங்கட்கிழமை வருவேன். அப்போது தாவரவியல் நியதிப்படி அந்தச் சூரியகாந்தி மொட்டுகள் மலர்ந்திருக்கும். அப்போதாவது கலாநிதிக்கு விசர் இல்லை என்று நீங்கள் நம்புங்கள் - என்று கூறிவிட்டு வெளியேறியபோது ஒரு செங்கட்டித்துண்டு அவன் தலையில் வந்து மோதியது. திடுக்குற்றவன் அடிப்பட்ட இடத்தைக் கைகளால் மூடியபோது அவன் கைகள் இரத்தத்தால் நனைந்தன.
நண்பா திங்கட்கிழமை காலை மறந்து விடாது வந்துவிடு’ என்று கூறிக்கொண்டே கையிலிருந்த வேறோர் செங்கட்டித்துண்டை நிலத்தில் போட்டுவிட்டு கலாநிதி உள்ளே தோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். கலாநிதிக்கு உண்மையில் விசர் தான் என்பதனை மறுக்க பாலிய நண்பனால் இப்போது முடியவில்லை.
இப்படி ஒரு கதை !
பாவம் கலாநிதி ! உண்மையில் அவருக்கு வி . தான் என்பதை அவரே நிரூபித்து விட்டார்.
- வாகை’
தை 1981
பிரான்ஸ் நாட்டில் தமிழ்ச் சிற்றிதழ்கள் - பத்திரிகைகள் அறிமுகம் ‘பிரான்ஸ் இன்றேல், உலகமே தனித்துவிடும்’ என்றார் விக்ரர் ஹியுகோ. சுதந்திரம் - Liberté, சமத்துவம் -Egalité, சகோதரத்துவம் - Fraternite என்பன பிரெஞ்சுப் புரட்சியின் சாசனங்கள்.
வரலாற்றில் பிரசித்தி பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் தாக்கம், மனித உரிமைகளை நன்கு மதிக்கும் முதல் நாடு என்னும் நிரந்தரப் பெயரைப் பிரான்சுக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். பண்பாட்டுப் பாரம்பரியம், செல்வந்த அனுபவம், நல்ல வாழ்க்கை, உயர்ந்த மனப்பான்மை முதலானவற்றில் ஊறியவர்களாக பிரெஞ்சு மக்கள் விளங்குகிறார்கள் என்பர்.
கலை இலக்கியம், பண்பாடு, நாகரீகம், வாழ்வியல் இன்பங்கள், சுற்றுலாத்துறை முதலானவற்றுக்கு உலகின் வரவேற்புத் தலைவாசலாகவும் Lum rfleiuo நகரம் விளங்குகிறது.
95 மொழிகளில் பிரெஞ்சு மொழிக்கே இலக்கியத்திற்கான அதிக நோபல் பரிசுகள் கிடைத்துள்ளன.
திருக்குறளுக்கு பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் உண்டு.
• பஞ்சதந்திரக் கதை பிரெஞ்சு மொழித் தழுவல் எனப்படுகிறது. தமிழில் காகத்தின் வாயில் இருப்பது வடை, பிரெஞ்சில் காகத்தின் வாயில் இ பாற்கட்டி. எனத் தமிழில் பேசப்படும் சொற்கள் பிரெஞ்சுச் சொற்களாகும்.
பிரெஞ்சு மொழியில் வழங்கப்படும் Riz - grilë, Tek - Ggjëje, Catamaran கட்டு மரம் என்பன தமிழ்ச் சொற்களாகும்.
பிரெஞ்சு அறிஞர்களில், பிபெர்ஒ, ஜூலியன் வன்சன், மார்த்தினே, போலே போன்றோர் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை பிரெஞ்சில் எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளனர்.
* பிரெஞ்சு மொழியிலிருந்து விக்ரர் synóluq Les Misérables, Thérése Raquin, Germinal மற்றும் பல்ஜாக், மோப்பாசான், வோல்த்தெயர், மோலி எர், துமாஸ், ஜூல்வேர்ன் ஆகியோரின் படைப்புகள் தமிழுக்கு வந்துள்ளன. பிரெஞ்சு மொத்த சனத்தொகையில் 75 வீதம் கத்தோலிக்கர், 7 வீதம் பிற மதத்தினர், 18 வீதம் மதம் அற்றவர்கள். இங்கு மதம் தனி ஒருவரின் தனிப்பட்ட விருப்பமாக வலுவிழந்து வருகிறது. ‘பிரான்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்தும் பெருமையானவை, அருமையானவை.
பிரான்ஸ் நாட்டில், முன்னர் அவர்களது ஆளுகைக்குட்பட்டிருந்த பாண்டிச்சேரி, காரைக் கால் போன்ற இடங்களைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர்களும், ! ரியூனியன் தீவு - மாநிலத்தைச் சேர்ந்த தமிழ்ப்பெயர் கொண்டவர்களும் சுமார் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்த போதிலும் அவர்களிடத்து தமிழில் தொடர்புகள், பேச்சு - உரையாடல், செயற்பாடுகள் மிக அரியதாகவே இருக்கிறது எனலாம். அவர்கள் பிரெஞ்சு | மொழியிலேயே தமது தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பரம்பரையினர் தமிழ் அறிந்தவர்களாக இருந்தபோதிலும் அவர்களது அடுத்த சந்ததியினர் தமிழில் உரையாட முடியாதவர்களாக இருக்கின்றனர்.
சில குடும்பத்தினர் மாத்திரம் தமிழ்ப் பற்றுள்ளவர்களாகவும், தமிழகத்துடன் தொடர்புகளைப் பேணுபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களது தமிழ் வாசிப்பு தமிழக வார, மாத சஞ்சிகைகளும் சினிமா ஏடுகளாகவும் இருக்கின்றன.
பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. பல்கலைக்கழக புகுமுக - உயர்தர வகுப்புப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற தமிழையும் ஒரு பாடமாகப் படித்துக் கொள்ளலாம். உலகத் தமிழாராய்ச்சி மாநாடு பாரிஸ் மாநகரில் பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றது தெரிந்ததே.
இலங்கையில் 1979-ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.ஆர்.அரசின் கெடுபிடிகள், பயங்கரவாதச் சட்டம் : அமுல் மற்றும் காரணங்களால் இளைஞர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயரத் தொடங்கினர். ரஷ்யா, இத்தாலி ஆகிய நாடுகள் வழியாக அன்று பலரும் ஜெர்மனிக்கு வந்து சேர்ந்தனர். அதில் சிலர் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழையத் தொடங்கினர். 1983- இனக் கலவரத்தின் பின்னர் பல்லாயிரக் கணக்கில் இடம் பெயரத் தொடங்கிய மக்களில் கணிசமானோர் பிரான்ஸ் நாட்டிற்கு வந்தனர். *
பின்னர் பிரான்சுவா மித்திரோன் பிரான்சின் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அகதி அடைக்கலம் கோரி விண்ணப்பித்த தமிழர் பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் எனலாம். இன்று சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர் பிரான்சில் வசிக்கின்றனர் 6T60T 6). Th. இதில் ஆயிரக்கணக்கானோர் பிரெஞ்சுக் குடியுரிமையும் பெற்றுவிட்டனர்.
பிரான்சில் புகலிடம் பெற்ற மக்களின் பிள்ளைகளது நலன் கருதி தமிழ்ப் பாடசாலைகள் தனிப்பட்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டன. ஆயுதப் போராட்ட இயக்கங்களின் ஈர்ப்பினால் புகலிடத்திலும் எம் மக்கள் பலரும் குறிப்பாக இளைஞர்கள் ஒவ்வொரு இயக்கங்களின் ஆதரவாளர்களாகக் காட்டிக் கொண்டனர். செயற்பட்டனர் என்றே கூறலாம்.
அவ்வாறு செயற்பட்ட ஒவ்வொரு பிரிவினருள்ளும் கலை இலக்கிய அரசியல் நேசிப்பு - தேடல் மிகுந்த ஒருசிலர் தமது குழுவினருக்குச் சார்பானதாகச் சஞ்சிகைகள், பிரசுரங்களை வெளியிடத் தலைப்பட்டனர்.
சஞ்சிகைகள் - பத்திரிகைகளின் தோற்றம் 1982-ம் ஆண்டளவில் (காலஞ்சென்ற) சபாலிங்கத்தின் முயற்சியில் ‘எரிமலை’ சஞ்சிகையும், (காலஞ்சென்ற) உமாகாந்தன் முயற்சியில் ‘தமிழ்முரசு’ சஞ்சிகையும் வெளிவரத் தொடங்கின. இவை இலங்கை அரசியல் பிரச்சினைகளை முக்கியத்துவப் படுத்துவனவாகச் செய்திகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்தன. கதை, கவிதைகளும் இடம்பெற்றன.
மகளிர் அமைப்பின் சார்பில் லட்சுமியின் முயற்சியில் கண்ட் சஞ்சிகையும், புங்குடுதீவு நீர்வள அபிவிருத்திச் சபை வெளியீடாகப் ‘புதுவெள்ளம்` சஞ்சிகையும் ஒரு சில இதழ்கள் வெளிவந்தன. இலக்கிய நேசிப்பும், தேடலும்மிக்க இளைஞர்களான அருந்ததி, மனோ ஆகியோரின் முயற்சியில் 1989ல் "தேடல் அரசியல், இலக்கிய விழிப்புணர்வுச் சஞ்சிகையென வெளிவந்தது. ஆற்றல் மிக்க செயற்பாட்டாளரான (காலஞ்சென்ற) கலைச்செல்வன் மற்றும் சுகன் ஆகியோரின் முயற்சியில் “பள்ளம் 1989-ல் வெளிவந்தது.
யாழ். ‘ஈழநாடு’ பத்திரிகையில் பணியாற்றிய எஸ். எஸ். குகநாதனை ஆசிரியராகக் கொண்டு ‘பாரிஸ் ஈழநாடு 1991-ல் வாரப் பத்திரிகையாகத் தொடர்ந்து வெளிவரத் தொடங்கியது. எஸ்.கே. காசிலிங்கம், இ. கந்தசாமி, எஸ். பாலசந்திரன் ஆகியோர் அதில் பங்களித்தனர்.
மனோ முயற்சியில் ஒசை சஞ்சிகை தரமானதாக 1990 முதல் வெளிவரத் தொடங்கியது. இச்சஞ்சிகை 1994 வரை முத்திங்கள் இதழாகத் தொடர்ந்து வெளிவந்து இளம்படைப்பாளிகளுக்குக் களமாக அமைந்தது.
இலங்கைக் கலையகத்தின் வெளியீடாக 1991-ல் ‘கலையமுதம்’ வெளியானது. பாரிஸ் மாநகரில் அக்காலப் பகுதியில் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் இலக்கியத் தாகம் கொண்ட இளைஞர்களின் ஆதர்ஸமாக விளங்கி ஆற்றுப்படுத்தினார் எனச் சொல்லலாம். அக்காலத்தில் சஞ்சிகையாளர் பலரும் அவரிடமிருந்து ஆக்கங்களைப் பெற்றனர். ஒரே சஞ்சிகையில் பல புனைப் பெயர்களில் எழுதிப் பக்கங்களை நிரப்பினார் என்றும் கூறுவர். மார்க்சிச விளக்கங்களைப் பெறவும், இளைஞர்கள் அவரை அணுகியதுண்டு.
ஆரம்ப காலத்தில் கையெழுத்துப் பிரதியாகவும், பின்னர் தட்டச்சு செய்யபப்பட்டும் வெளியிடப்பட்டன. அவற்றுள் சிலவற்றின் அட்டைகள் மாத்திரம் போட்டோக் கொப்பி எடுக்கப்பட்டு கலரில் பிரசுரிக்கப்பட்டன.
1990 காலப்பகுதியில் சு.கருணாநிதி, உதயகுமார் ஆகியோரின் முயற்சியில் ‘சிந்து என்ற சஞ்சிகை வெளியானது. ரயாகரன் முயற்சியில் 'சமர்’ என்ற சஞ்சிகை அரசியல் கோட்பாடுகளை மேலோட்டமாக விளக்கும் வகையில் வெளிவரத் தொடங்கியது.
1992 காலப் பகுதியில் துரைஸ் முயற்சியில் 'சிரித்திரு' நகைச்சுவை இதழ் வெளிவரத் தொடங்கியது. 1993ம் ஆண்டளவில் ‘தமிழன்’ பத்திரிகை வெளிவந்தது.
அண்மையில் காலஞ்சென்ற பவன் கணபதிப்பிள்ளை முயற்சியில் கதலி' சஞ்சிகை 1995 காலப் பகுதியில் வெளிவரத் தொடங்கியது. ‘நண்பன்’ என்ற பல்சுவை இதழும் வெளிவந்தது. நோர்வே நாட்டில் வெளிவரத் தொடங்கிய ‘சர்வதேசத் தமிழர் சஞ்சிகை ஒரு இதழைப் பிரான்சில் வெளியிட்டது.
1992 - ‘ஐரோப்பா முரசு’ பத்திரிகை வி.ரி. இளங்கோவனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.
1993-1994 காலப்பகுதியில் கி.பி. அரவிந்தன் தொகுப்பில் 'மெளனம் கலை இலக்கிய சஞ்சிகை சில இதழ்கள் வெளிவந்தன.
1996 காலப்பகுதியில் பாலம் சஞ்சிகை அரசியல் முனைப்புடன் வெளிவந்தது.
1997-ம் ஆண்டளவில் மனோவின் முயற்சியில் ‘அம்மா என்ற சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. இச்சஞ்சிகையில் உலகின் பல பாகங்களிலிருந்தும் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் பெறப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. இச்சஞ்சிகை அவுஸ்திரேலியச் சிறப்பிதழும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
1998 முதல் “எக்ஸில்’ என்ற முத்திங்கள் சஞ்சிகையும் வெளிவரத் தொடங்கியது. பல நாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகள் இதில் இடம் பெற்றன.
பத்மா இளங்கோவனை ஆசிரியராகக் கொண்டு 1999-ல் ‘பரிசு’ என்ற பெயரில் சிறுவர்க்கான சஞ்சிகை வெளிவரத் தொடங்கியது. காத்திரமான படைப்புகளைத் தாங்கி வெளிவந்த 'உயிர் நிழல்' சஞ்சிகை கலைச்செல்வனின் மறைவுக்குப் பின்னரும் இன்றுவரை லட்சுமியின் முயற்சியில் முத்திங்கள் இதழாக வெளிவருவது குறிப்பிடத்தக்கது.
‘ஆதங்கம்’ என்ற சஞ்சிகையை வாசுதேவன், மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.
அண்மையில் காலஞ்சென்ற ரமேஷ் சிவ ரூபன் முயற்சியில் வான்மதி’ என்ற சஞ்சிகை 1999-ல் வெளிவரத் தொடங்கியது. இக்காலத்தில் சுட்டுவிரல்’ என்ற சிறிய செய்தி இதழும் வெளியாகியது.
2000-ம் ஆண்டில் ‘சங்கப்பலகை’ கவிமஞ்சரியும் வெளியிடப்பட்டது. ஈழமுரசு’ என்ற பத்திரிகையும் வாரந்தோறும் வெளிவரலாயிற்று. வணக்கம், விளம்பரம் என்ற பெயர்களில் விளம்பர இதழ்களும் வெளிவந்தன.
பாரதி அச்சகத்தினர் *தாமரை என்னும் சஞ்சிகையை இடைக்கிடை வெளியிட்டு வருகின்றனர்.
பாரிஸ் கம்பன் கழகத்தினர் கம்பன்’ என்ற திங்கள் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
பாரிஸ் ராகவேந்திரா சமூக நலச் சங்கத்தின் வெளியீடாக ‘தீபச்சுடர் சஞ்சிகையும் 2005-ம் ஆண்டளவில் ஆன்மீக விடயங்களோடு பல்சுவை இதழாக வெளிவரத் தொடங்கியது. திருமறைக் கலாமன்றத்தின் பிரான்ஸ் கிளையினர் முற்றம்’ என்ற பெயரில் செய்தி இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.
‘அசை’ என்ற பெயரில் அரசியல் கோட்பாடு விளக்கச் சஞ்சிகை இரு இதழ்கள் வெளிவந்தன.
கதம்பம், உறவுகள், வெகுமதி என்பனவும் சில இதழ்கள் வெளிவந்தன.
வண்ணை தெய்வத்தின் 'வண்ணை’ என்ற கலை இலக்கியச் செய்தி இதழும் இடைக்கிடை நினைத்த நேரத்தில் வெளிவரும் சஞ்சிகையாகப் பிரசுரமாகிறது.
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணியின் பிரான்ஸ் கிளையினரது வெளியீடாக "வடு’ என்ற செய்தி ஏடும் சில இதழ்கள் 2007-ம் ஆண்டளவில் வெளிவந்தன.
வேலணை மத்திய மகா வித்தியாலயம், மகாஜனக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் சங்கங்களின் வெளியீடாக ஆண்டுதோறும் மலர்கள் வெளியிடப்படுகின்றன. 'நிலா’ என்ற சஞ்சிகை 2001 முதல் இடைக்கிடை வெளிவருகிறது.
இன்று உயிர் நிழல், நிலா, முற்றம், கம்பன் போன்றனவே தொடர்ந்தும் வெளிவருகின்றன எனக் கூறலாம்.
90-களில் சிற்றிதழ்கள் பல பிரான்ஸ் நாட்டில் வெளிவந்தன. சர்ச்சைகளை ஏற்படுத்தின. விவாதிக்கப்பட்டன. தொடர்ந்து இலக்கியச் சந்திப்புகள், கலை இலக்கிய நிகழ்வுகள் நடந்தன. அக்காலம் விழிப்புணர்வுக் காலம் எனச் சிலர் குறிப்பிடுவர்.
சிற்றிதழ்கள் - பார்வை
சிற்றிதழ்கள் வெளிப்பாட்டுக்குத் தனிநபர் சார்ந்த ஆளுமை, விருப்பு மாத்திரமல்ல, அரசியல் - பண்பாடு - விருப்புகளும் காரணங்களாகின்றன. சிறு சிறு குழுவினராகவும், அமைப்புகளாகவும், ஒன்று சேர்ந்தும், பிளவுற்றும் முயற்சித்து வருகின்றனர். சிற்றிதழ் வெளியிடுவோர் அதிகமானோர் தாயகத்தில் அவற்றில் அனுபவமோ, இதழியல் கற்கை நெறியைக் கற்றவர்களோ அல்ல.
முதலில் கையெழுத்துப் பிரதிகளாகவும், தட்டச்சு செய்யப்பட்டும், பின்னர் போட்டோக கொப்பி செய்யப்பட்ட இதழ்களாகவும் வெளியிடப்பட்டன.
சிற்றிதழ் - விடயதானங்கள்
அரசியல் நிலைப்பாடு விளக்கங்கள் - முரண்பாடுகள் - சர்ச்சைகள். இலங்கை அரசுக்கெதிரான முறைப்பாடுகள் - வன்முறைகளின் விளக்கங்கள். இந்திய அரசுக்கெதிரான அமைதிப் படை காலம் முதல் இன்றுவரை - விளக்கங்கள். தமிழர்க்கான அரசியல் அதிகாரம் கோரல் - வரலாற்று விளக்கங்கள். தமிழ்மொழி - பண்பாடு - பெருமைகள் - வரலாற்றுத் தொன்மை.
• சாதிப் பிரச்சினைகள் - போராட்டப் பதிவுகள்.
• புகலிட வாழ்வின் துயரச் சுமைகள், குடும்பப் பிறழ்வுகள்.
• பெண்கள் மீதான அடக்குமுறைகள் - கொடுமைகள். சீதனப் பிரச்சசனைகள் - விடுதலை
• புலம்பெயர்ந்துவரும் வழிகளில் ஏற்படும் தொல்லைகள் - ஏஜன்சிக்காரர் சிலரின் கொடுமை, ஏமாற்று.
கவிதை, கதைகளில் புதிய வடிவங்களை மேற்கொள்ளல்.
போராட்டக் குழுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டமை, கிழக்கில் கொலைகள் ஆகியன சம்பந்தமாக முக்கிய ஆயுத அமைப்பின் மீது விமர்சனங்கள்.
பெண்ணிய அரசியலை முன்னெடுக்கும் மனோபாவம்
பெண் எழுத்தாளர்களிடம் முனைப்பு.
ஒசை, அம்மா, எக்ஸில், உயிர் நிழல் என்பன புதிய வடிவங்களைப் படைப்புகளிலும், அமைப்பிலும் பரீட்சார்த்தமாக மேற்கொண்டன. விமர்சனங்களை எதிர்கொண்டன.
பின் நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் என்பன கவனத்திலெடுக்கப்பட்டன. விமர்சிக்கப்பட்டன.
இத்தகைய முயற்சிகளின் விடயங்களின் களமாக சிற்றதழ்கள் விளங்கின.
கடந்த சில வருடங்களாக இணையத்தளங்கள் சிற்றதழ் வெளியீடுகளின் இடத்தை கபஸ்ரீகரஞ் செய்துவிட்டன எனக் கூறலாம். இன்று சிற்றிதழ் வெளியீட்டாளர், படைப்பாளிகள் பலர் அத்துறையிலிருந்து ஒதுங்கி விட்டனர் என்றே கூறவேண்டியுள்ளது. சிலர் மாத்திரம் இணையத்தளங்களில் இடைக்கிடை எழுதி வருகின்றனர்.
இயைத்தளங்களில் பின்னூட்டம் எழுதுபவர்கள், தமிழைப் பிழையின்றி எழுத முடியாதவர்கள் எல்லாம் இன்று தாங்களும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் என்று கூறிக்கொள்ளும் சூழ்நிலைதான் எங்கும் காணப்படுகிறது.
எங்கள் தலைமுறையோடு சிற்றிதழ் வாசிப்பு அற்றுப் போய்விடுமா என்ற ஏக்கமும் ஏற்படுகிறது. புகலிடத்தில் அடுத்த சந்ததி தமிழ் இலக்கியப் படைப்பில் ஈடுபடுமா என்பது கேள்விக்குரியது.
புகலிட நாடுகளில் அந்தந்த நாட்டு மொழிகளில் அடுத்த சந்ததியினர் ஒரு சிலர் படைப்புகளைத் தரலாம். எவ்வளவுதான் தமிழ்ப் பாடசாலைகளை ஆரம்பித்து தமிழ் புகட்டினாலும் அவர்களது சிந்தனா மொழியிலேயே படைப்புகளைத் தரலாம் என்பதுவே உண்மை.
எனவே புகலிட இலக்கியப் பரப்பில் இது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இத்தகைய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
(சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிற்றிதழ்கள் அரங்கில் இடம்பெற்ற உரையின் சுருக்கம்)
- "மல்லிகை"
வைகாசி - 2011
ஈழத்துக் கவிதைப் பரப்பில் தீவகம். !
ஈழத்து இலக்கியப் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலம் எனப்படுவது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்னும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் எழுந்த கி. மு. 300 - கி. பி. 200 ஆகிய கால எல்லையிற் பாண்டி நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலமாகும். அக்காலத்தில் ஈழத்தின் வடபகுதியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்களும் மதுரைக்குச் சென்று சிலகாலம் தங்கித் தாம் பாடிய செய்யுள்களை அரங்கேற்றியதாக அறியமுடிகிறது. ஈழத்திலிருந்து மதுரைக்குச் சென்ற தமிழ் புலவர் பூதன் தேவனார் ஆவார். இவரையன்றி வேறும் ஈழத்துப்புலவர் சங்கத்திலிருந்தனர் என அறிய முடியவில்லை. பூதன்தேவனார் காலம் கி. பி. 130 வரையிலாகும்.
அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலே மொத்தம் ஏழு பாடல்கள் பூதன் தேவனாராற் பாடப்பட்டுள்ளன. அவை பாலை, குறிஞ்சி ஆகிய திணை வகையை விளக்குவன.
ஈழத்து தமிழ் நூல்களுட் காலத்தால் முந்தியது ‘சரசோதி மாலை ஆகும். 1310-ல் இயற்றப்பட்ட இச்சோதிட நூலை ஆக்கியவர் ‘தேனுவரைப் பெருமாள்’ என்று வழங்கும் போசராச பண்டிதர் ஆகும்.
அடுத்து யாழ்ப்பாண மன்னர் ஆதரவுடன் இயற்றப்பட்டவை “செகராசசேகரம்’ என்னும் வைத்திய நூல். அடுத்து 'செகராச மாலை’ என்னும் சோதிட நூல். அடுத்து தக்கிண கைலாச புராணம்’, கோணேசர் கல்வெட்டென வழங்கும் “கோணேசர் சாசனம்’ என்பன பாடப்பட்டன.
‘கண்ணகி வழக்குரை காவியம்’, ‘திருக்கரைசைப் புராணம்’ என்பன அடுத்து வந்தன. மன்னன் பரராசசேகரன் காலத்தில் (1478 - 1519) அவர் தம்பி சங்கிலி செகராசசேகரனும் மருமகனான அரசகேசரியும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கத்தை ஸ்தாபித்தனர். ‘பரராசசேகரம்’ என்னும் வைத்திய நூல், "கதிரைமலைப் பள்ளு’, ‘இரகுவம்சம்’ என்பன இயற்றப்பட்டன. இவ்வாறு ஈழத்தமிழ், இலக்கியப் பரம்பரை தொடர்ந்தது. இந்த இலக்கியப் பாரம்பரியம் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த |\ மகாவித்துவான் கணேசையர் வரை தொடர்ந்தது.
அந்தப் பாரம்பரியத்தில் சின்னத்தம்பிப் புலவர், முத்துக்குமாரகவிராயர், சேனாதிராய முதலியார், சிவசம்புப் புலவர், சோமசுந்தரப் புலவர் ஆகியோர் பஞ்சரத்தினரங்கள் எனப் போற்றப்படுபவர்கள். இந்த வரிசையில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் முதல் மட்டக்களப்புப் புலவர் பூபாலபிள்ளை வரை வரலாறு நீள்கிறது.
அன்றைய புலவர்களில், புகழ்பூத்து விளங்குபவர்களில் சின்னத்தம்பிப் புலவரைக் குறிப்பிட்டுச் சொல்வர். இவர் “கல்வளை யமக அந்தாதி, மறைசை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு’ என்பவற்றை இளம்வயதிலேயே பாடியதாகக் கூறப்படுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சோமசுந்தரப் புலவருக்குப் பின்பு, பாரதி, பாரதிதாசன் கவிதைகளால் உந்தப்பட்ட பல கவிஞர்கள் முகிழ்ந்தெழுந்தனர். தமிழுணர்ச்சி பொங்கிய ஆவேசப் போக்குடன் எழுதினர் பலர். அதில் முக்கியமானவர் பண்டிதர் க. சச்சிதானந்தன்.
'தின்னத் தமிழெனக்கு வேண்டுமேயடா - தின்று
- என்றும்
‘சாவிற்றமிழ் படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.
- எனத் தமிழுணர்ச்சி பொங்க எழுதியவர்.
இதனை, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பிரமுகர்,
மலேசியப் பேராசிரியர் வீரப்பனார் முதல் தமிழகத்தில் சிலரும் பாரதிதாசன் கவிதை எனப் பிழைபடக் குறிப்பிட்டுள்ளனர்.
‘பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்கவேண்டும் ஒடையிலே எம்சாம்பர் கரையும்போதும் ஒண்டமிழே சலசலத்து ஓயவேண்டும்.! - என்று பாடியவர் கிழக்கிலங்கைக் கவிஞர் ராஜபாரதி.
இவரது மொழி உணர்ச்சி, இன எழுச்சிப் பாடல்கள் குறிப்பிடத்தக்கவை இந்தப் பாதையில் இன்றும் தொடர்பவர்களில் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை ஆகியோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
எம் காலத்து கவிதைப் பரப்பில் ஈழத்தில் நான்கு கவிதை மன்னர்களை குறிப்பிடலாம். மகாகவி, நீலாவணன், சில்லையூர் செல்வராசன், முருகையன் ஆகியோர் கவிதைத்துறையில் சாதனையாளர்கள். யாப்பினைச் சிதைக்காமலும், நிராகரிக்காமலும் புதியவகை வெளிப்பாட்டுத் திற்னோடு கவிதைகள் தந்தவர் மகாகவி. பேச்சோசைப் பண்பை, மக்கள் தமிழை கையாண்டு அற்புதமாக எழுதியவர் மகாகவி. அவ்வாறே, பேச்சோசைப் பண்போடும், மரபுவழி நின்று சமூகநோக்குடன் கவிதை யாத்தவர் நீலாவணன். இவரது கவிதைகளும், காவியங்களும் சிறப்புடையன.
சமூகநோக்கோடு, ஒடுக்கப்பட்டோரின் எழுச்சிக்கான கவிதைகளும், அங்கதச்சுவை சொட்டும் கவிதைகளும் யாத்தவர் சில்லையூர் செல்வராசன். இனிக்கும் குரலாலும், இனிய தமிழாலும், உறைத்திடும் கருத்துக்களாலும் கவியரங்கத் தலைமைகளுக்குப் பெருமை சேர்த்தவர்.
யாப்பில் புதுமையும், விஞ்ஞானச் சிந்தனைப் போக்கும் சமூகநல நோக்கும் கொண்ட கவிதைகளை யாத்துவருபவர் முருகையன். இவர்களைவிட வித்துவான் வேந்தனார், அண்ணல், புரட்சிக்கமால், யுவன், கே. கணேஷ், சக்தி அ. பாலையா, நாவற்குழியூர் நடராசன், மதுரகவி இ. நாகராஜன், சி. அம்பிகைபாகன், நாக. சண்முகநாதபிள்ளை, நாவேந்தன், வி. கந்தவனம், பாண்டியூரான், திமிலைத்துமிலன், ஜீவா ஜீவரத்தினம், காரை சுந்தரம்பிள்ளை, அரியாலையூர் வே.ஐயாத்துரை, புலவர் பார்வதிநாதசிவம், பண்டிதர் க. வீரகத்தி, யாழ். ஜெயம், கல்வயல் குமாரசாமி ஆகியோருட்படப் பலர் மரபுவழியைத் தொடர்ந்தனர்.
எம்.ஏ. நுஃமான், மு. பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச. ஜெயபாலன், சேரன், சோலைக்கிளி, சிவரமணி, செல்வி, ஊர்வசி என நவீன கவிதையாளர்கள் வரிசை தொடர்கிறது. இனி எம் தீவகத்தின் கவிதைப் பாரம்பரியத்தைப் பார்ப்போம். மறைமலை அடிகளின் மூதாதையருக்கு புங்குடுதீவுத் தொடர்புண்டு என ஒரு குறிப்புண்டு.
1870-ம் ஆண்டளவில் புங்குடுதீவில் எமது மூத்த பரம்பரையைச் சேர்ந்த பரமானந்தரின் மகனான இராமலிங்கச் சட்டம்பியார் ‘கப்பற்பாட்டு, புயற்பாட்டு, கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம் உட்பட பல பாடல்கள் இயற்றியுள்ளதாகக் குறிப்புகளுண்டு. இதில் “கேரநகர் அரிகரபுத்திரர் பதிகம் ஈழத்து தமிழ்க் கவிதைக் களஞ்சியத்தில் இடம்பெற்றுள்ளது.
வேலணையைச் சேர்ந்த வே.க. இராமலிங்கம்பிள்ளை (1868-1918) இளவயதில் இந்தியா சென்று கல்விகற்று அங்கேயே வாழ்ந்து தமிழ்ப்பணி புரிந்தவர். இவர் இயற்றியது சிதம்பரப் பதிகம். வேலணையைச் சேர்ந்த (1864-1940) விநாசித்தம்பி கந்தப்பிள்ளை என்பவர் இயற்றியது 'மகாகணபதிப் பிள்ளையார் திருஊஞ்சல்’.
காரைநகரைச் சேர்ந்த (1819-1898) மு. கார்த்திகேசப் புலவர் இயற்றியது காரைநகர் திண்ணப்புரவந்தாதி’. வேலணை - சரவணை ஊரைச் சேர்ந்த (1863-1943) தம்பு உபாத்தியாயர் இயற்றியவை ‘நாகதீபப் பதிகம், நயினை நாகபூசணி இரட்டை மணிமாலை’. நயினாதீவைச் சேர்ந்த (1891-1933) வரகவி நாகமணிப் புலவர் இயற்றியவை “நயினை நிரோட்டக யமகவந்தாதி, நயினை மான்மியம்’. காரை நகரைச் சேர்ந்த (1857 - 1939) நாகமுத்துப் புலவர் இயற்றியவை திண்ணபுரத்திருப்பதிகம், திண்ணபுர ஊஞ்சல், காரைநகரைச் சேர்ந்த (1889-1953) ச. பஞ்சாட்சரக் குருக்கள் இயற்றியவை திண்ணபுரவெண்பா, வீரகத்தி விநாயகர் இரட்டைமணிமாலை.
நயினாதீவைச் சேர்ந்த (1909-1949) ப. கு. சரவணபவன் இயற்றியது ‘நாகபூசணியம்பிகை பதிகம். 1827 - ஆண்டளவில் வாழ்ந்த அராலியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் அனலைத்தீவில் விவாகம் செய்தவரும் ஊர்காவற்றுறையில் ஆசிரியராக வாழ்ந்தவருமான முத்துக்குமாருப் புலவர் இயற்றியவை சீமந்தனி நாடகம், பதுமாபதி நாடகம், குறவஞ்சி, தேவசகாயம்பிள்ளை நாடகம்’. இவ்வாறாக வந்த தீவக இலக்கியப் பாரம்பரியத்தில் எம் காலத்தில் வேலணை - சரவணையைச் சேர்ந்தவர் வித்துவான் வேந்தனார், குழந்தைக் கவிதை முன்னோடிகளில் முக்கியமானவர்.
இவரது.
“காலைத் தூக்கி கண்ணில் ஒற்றிக்
கட்டிக் கொஞ்சும் அம்மா
பாலைக் காய்ச்சிச் சீனிபோட்டு
பருகத் தந்த அம்மா . - எனத் தொடங்கும் குழந்தைக் கவிதை புகழ்பெற்றது.
இதனை இயற்றியவர் பெயர் தெரியாது, இன்று சிலர் பிழையாகக் குறிப்பிடுவதையும் புலம்பெயர்ந்த நாடுகளில் காணலாம்.
வேந்தனார் தமிழரசுக் கட்சி நடாத்திய திருமலை பாதயாத் திரைக்கான கும்மி பாடலை எழுதியும் புகழ்பெற்றவர். மற்றும் வேலணைக் கவிஞர் தில்லைச்சிவன், நயினாதீவைச் சேர்ந்த நாக. சண்முகநாதப்பிள்ளை ஆகியோரும் புகழ்பெற்றவர்கள்.
போராட்டக் கவிதை எழுதிய செல்வி வானதி கவிஞர் நாக. சண்முகநாதபிள்ளையின் மகளாவார். வேலணையைச் சேர்ந்த சு. கருணாநிதி, வாசுதேவன் உட்படப் பலரும் கவிதைத்துறையில் ஈடுபட்டுள்ளனர்.
புங்குடுதீவில், மலேசியாவில் தமிழ்ப்பணிபுரிந்த சி. குருமூர்த்தி, பேராசான் சி. இ. சதாசிவம் பிள்ளை, வித்துவான் பொன். அ. கனகசபை, வித்துவான் சி. ஆறுமுகம், பண்டிதர் வீ. வ. நல்லதம்பி, நாவேந்தன், சி. க. நாகலிங்கம், த. துரைசிங்கம், மு. பொன்னம்பலம், என். கே. மகாலிங்கம், வி. ரி. இளங்கோவன், சு. வில்வரத்தினம், பாலகணேசன், இ. சம்பந்தன் ஆகியோருட்படப் பலர் கவிதைத்துறையில் ஈடுபட்டுள்ளதைக் குறிப்பிடலாம்.
நெடுந்தீவில் வ. ஐ. ச ஜெயபாலன், கோசல்யா சொர்ணலிங்கம், லக்ஸ்மணன், முகிலன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இந்த வரிசையில் அனலைதீவைச் சேர்ந்த ஆறு. இராசேந்திரம் அவர்களையும் குறிப்பிடலாம்.
மேற்குறிப்பிடப்பட்டவர்களைவிட பல இளங்கவிஞர்களும் இன்று வேகமாக எழுதி வருகின்றார்கள். புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து எழுதிவரும் தீவகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட L6) இளங்கவிஞர்களின் பங்களிப்பும் பதியப்பட வேண்டியனவாகும்.
தமிழ் மக்களின் மதிப்புக்குரிய மிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை
கடந்த முப்பத்தெட்டு வருடங்களுக்கு மேலாகத் தமிழ்ச் சுருக்கெழுத்துத்துறை வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிய ‘ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தை’ எனப் போற்றப்பட்ட திரு. சி. இராமலிங்கம் இவ்வுலகைவிட்டு மறைந்து ஒரு மாதமாகிறது.
இலங்கையில் முதன்முதலில் 1951-ம் ஆண்டில் இலங்கை வானொலியில் ஒரு தமிழ்த் தட்டெழுத்தாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட திரு. சி. இராமலிங்கம் பின்னர் 1952-ம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்க மொழிகள் கமிஷனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக் கல்லூரியில் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சுருக்கெழுத்துத் துறையில் தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதனாசிரியராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டார். இப்பதவிக்குப் பலர் போட்டியிட்டும் வேகப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்ததினாலேயே இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனந்தாக் கல்லூரி தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு 1959-ம் ஆண்டிற்குப்பின் நிறுத்தப்பட்டதும், திரு. இராமலிங்கம் யாழ். பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் (முன்னர் கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரி) ஆரம்பிக்கப்பட்ட தமிழ்ச் சுருக்கெழுத்துத்துறைப் போதனாசிரியராகக் கடமையேற்றார்.
யாழ். பல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பல வருடங்களும், சம்மாந்துறை கனிஷ்ட தொழில்நுட்பக் கல்லூரியில் சிறிது காலமும் கடமையாற்றிய திரு. இராமலிங்கம், இலங்கையில் பாராளுமன்றம், நீதிமன்றங்கள், அரச திணைக்களங்கள் முதல் சிறு அலுவலகங்கள் வரை கடமையாற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்தாளர்களை உருவாக்கியவராவார்.
இலங்கையில் கல்விக்கூடங்களில் தமிழ் சுருக்கெழுத்து மாணவர்க்கான கைநூலாக இன்றும் நிலைத்துநிற்கும் நூலை உருவாக்கியவர், ஈழத்து முதல் தமிழ்ச் சுருக்கெழுத்துப்பயிற்சி பெற்ற மாணவியும், இவரது மனைவியுமான திருமதி மகாலட்சுமி இராமலிங்கம் ஆவார்.
‘ஸிலோவன்’ ஆங்கிலமுறையோடு 'பிட்மன்’ ஆங்கில முறையின் சில பகுதிகளையும் ஆய்விற்கொண்டு நம் பிரதேச வளச் சொற்கள், சொற்கணிப்புகள், சொல்வதெழுதற் பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் தமிழக நுல்களையோ அல்லது வேறு தமிழ்ச் சுருக்கெழுத்து நூல்களையோவிட நம் மாணவர்க்குப் பெரிதும் பயனுடையதாகும்.
ஆங்கிலச் சுருக்கெழுத்தின் வேகத்திற்கு ஈடாகத் தமிழ்ச் சுருக்கெழுத்தின் வேகம் அதிகரித்து வளம்பெற இவரது கண்டுபிடிப்புகள் உதவின எனத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் துறையில் உயர் பதவி வகிக்கும் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1976-ம் ஆண்டு பங்குனித் திங்கள் திரு. இராமலிங்கம் அவர்களின் பணியினைப் பாராட்டி வெள்ளிவிழா நடத்தப்பட்டது. அன்று யாழ். வீரசிங்கம் மண்டபம் ஈழத்து சுருக்கெழுத்து - தட்டெழுத்தளர்களாலும், கலை இலக்கிய நண்பர்களாலும் நிரம்பி வழிந்தமை பெருமைப்படத் தக்கதாகும். சிறப்பான வெள்ளிவிழா மலரொன்றும் அன்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் சுருக்கெழுத்துக் கல்வி படிக்கின்ற காலத்தில் தமிழக இலக்கிய வாதிகளுடனும், அரசியல்வாதிகளுடனும் அவருக்கு மதிப்புடன் கூடிய நட்பு இருந்தது. தமிழகக் கல்வியமைச்சர் பேராசிரியர் அன்பழகன், முன்னாள் நிதியமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன், காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் அகிலன் உட்படப் பலரின் அன்புக்குப் பாத்திரமானவர். வெள்ளிவிழாவின்போது அவர்களது வாழ்த்தும் இவருக்குக் கிடைக்கத் தவறவில்லை.
கடந்தவருட இறுதியில் அன்னாருக்கு மணிவிழா நடாத்த அன்பர்கள் முயற்சித்தபோது நாட்டு நிலைமை காரணமாக மறுத்துவிட்டார்.
‘இந்நாட்டில் பெரும் பணியொன்றில் ஈடுபட்டு வந்திருக்கும் இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தையெனக் கருத்தப்படத்தக்க அன்பர் இராமலிங்கம் நம்மவரின் மதிப்பிற்குரியவர், எத்துறையிலும் முன்னோடிகள் முழு மனதாரப் போற்றப்படவேண்டும்.
பேராசிரியர் கைலாசபதி 1976-ல் திரு. இராமலிங்கத்தின் வெள்ளிவிழாவையொட்டி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தெல்லிப்பளை - தையிட்டிப்புலம் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகவும், அராலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராமலிங்கம் அவர்களுக்கு ஆசைக்கு ஒரு மகளும் அன்புக்கு இரு மகன்மாரும் உள்ளனர்.
தமிழ்மொழி வளம்பெற, தமிழ்ச்சுருக்கெழுத்து வளர்ச்சி காண ஒரு விஞ்ஞானிபோலப் பங்களிப்பு நல்கி, அமைதியாக வாழ்ந்து, அரும்பணியாற்றி மறைந்த திரு. இராமலிங்கம் தமிழ்ப் பற்றுள்ளோர் அனைவரதும் மதிப்புக்கும் உரியவராவார்.
- ‘ஈழநாடு’ – 1990
விடுதலைப் போராட்ட வீரர் நாமக்கல் கவிஞர்
‘தமிழ னென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா !”
‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு
கத்தி யின்றி ரத்த மின்றி யுத்த மொன்று வருகுது
பிரசித்திபெற்ற இக் கவிதை வரிகளை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ஒரு காலத்தில் நம்நாட்டு அரசியல் மேடைகளில் இவை ஓங்கி ஒலித்தவை. ஆனால் இக்கவிதைகளை எழுதிய பெருங்கவிஞன் யாரென்பது நம்மவர் பலருக்கும் தெரியாது.
மகாகவி பாரதியாரால் ‘புலவன்’ எனப் பாராட்டப்பட்ட, காந்தியின் உப்புச் சத்தியாக்கிரக வழிநடைப் பாட்டை எழுதிய, சத்தியாக்கிரகப் போரில் கலந்துகொண்டு சிறைத்தண்டனை பெற்ற, 1949-ல் சென்னை அரசாங்கத்தால் ஆஸ்தானக் கவிஞராக நியமனம் பெற்ற, சென்னை அரசாங்கத்தால் எம். எல். சி. யாக நியமிக்கப்பட்ட, டில்லி சாகித்ய அகாடமியின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட, அகாடமியின் நிர்வாகக் குழு உறுப்பினராக நியமனம் பெற்ற, 1971-ல் இந்திய அரசாங்கத்தால் ‘பத்ம பூஷன்’ பட்டம் வழங்கப் பெற்ற, புகழ்பெற்ற விடுதலைப் போராட்டக் கவிஞர், தியாகி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை தான் அப்பெருங்கவிஞராவார்.
19-10-1888-ல் பொலிஸ் "ஏட் வெங்கடராமபிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதிகளின் புத்திரராகப் பிறந்த நாமக்கல் கவிஞர் இராம லிங்கம், தனது ஆரம்பக் கல்வியை நாமக்கல்லிலும் உயர்தரக் கல்வியைக் கோவை, திருச்சியிலும் பெற்றார். செளந்தரம்மாள் என்பவரைத் திருமணஞ்செய்து இரண்டு பெண், மூன்று ஆண் குழந்தைகளின் தந்தையானார்.
ஒவியங்கள் வரைவதில் வல்லவரான இவர், தாசில்தார் அலுவலகத்தில் குமாஸ்தாவாகச் சிலகாலமும், ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகச் சிலகாலமும் பணியாற்றியபின் ஒவியம் வரைந்து நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களுக்கு விற்றே வாழ்க்கை நடத்தினார். 1912-ல் டில்லியில் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டுவிழா நடந்தபோது அவரின் ஒவியம் ஒன்றை வரைந்து கொடுத்து தங்கப்பதக்கம் பரிசுபெற்றார்.
சிறு வயதிலிருந்தே சந்தக்கவி பாடும் திறமை பெற்றவர். வரகவி’ என அழைக்கப்பட்டவர். எஸ். ஜி. கிட்டப்பா, அவ்வை சண்முகம் ஆகியோர் நடத்திய நாடகங்களுக்கு நூற்றுக் கணக்கில் பாடல்கள் புனைந்து கொடுத்தவர். ‘நாட்டுக் கும்மி என்ற தலைப்பில் நூறு தேச பக்திப் பாடல்களைப் புனைந்து சேலம் பூரீ விஜயராகவாச்சாரியின் முன் பாடிக் காட்டி ‘புலவர்’ என்று 1. 9 1 4 – 6o பாராட்டுப்பெற்றவர். அதே ஆண்டில் பாண்டிச்சேரியில் மகாகவி பாரதியாரைச் சந்தித்துப் பாடிக்காட்டி, ‘பலே பாண்டியா, நீ ஒரு புலவன் இதில் ஐயமில்லை என்று பாராட்டப்பட்டவர். சுகாதார வாரத்துக்காக நிறைய ஆரோக்கிய சம்பந்தமாகப் பாடல்களை இயற்றியவர்.
1930-ல் நடந்த உப்புச் சத்தியாக்கிரகத்தின்போது திருச்சியிலிருந்து ராஜாஜி தலைமையில் வேதாரண் யத்துக்குச் சென்ற சத்தியாக்கிரகிகளுக்காக ‘கத்தியின்றி, இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலைப்பாடி ‘தேசியக் கவி’ எனப் பாராட்டப்பட்டவர். தேசியம், காந்தீயம் பற்றி ஏராளமான கவிதைகளை எழுதியவர்.
இவர் எழுதிய:
புதினங்கள் 5;
நாடகங்கள் 2;
கவிதை நூல்கள் 15;
கட்டுரைகள் 14;
இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் 7;
வாழ்க்கை வரலாற்று நூல்கள் 3;
இசை பற்றிய நூல்கள் 2;
மொழிபெயர்ப்பு நூல்கள் 2;
திருக்குறள் புது உரை 1.
இவர் எழுதிய ‘மலைக்கள்ளன் கதை கோவை பூரீராமுலு நாயுடுவால் சினிமா படமாக்கப்பட்டபோது, எம். ஜி. ஆர் இதில் கதாநாயகனாக நடித்தார். படம் மகத்தான வெற்றிபெற்றது. ஜனாதிபதி விருதும் பெற்றது.
இவரது ‘என் கதை’ என்னும் சுயசரிதையும் அவளும் அவனும் என்னும் நாவலும் பெயர் பெற்றவை. 1914-ல் திருச்சி காங்கிரஸ் கமிட்டிச் செயலாளராகவும், 1921- முதல் 1930 வரை நாமக்கல் வட்ட காங்கிரஸ் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்று காந்திஜியின் மிதவாதக் கொள்கையை ஆதரித்தவர். காங்கிரஸ் கூட்டங்களில் கணிரென்ற குரலில் தேசபக்தி நிறைந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி இளைஞர்களைத் தட்டி எழுப்பியவர். கல்கி கிருஷ்ணமூர்த்தி, அகிலன் ஆகியோர் இவரது சொற்பொழிவுகளால் மனமாற்றம் பெற்றவர்கள். 1932-ல் நடைபெற்ற சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். வேலூரிலும், மதுரையிலும் சிறைவாசம் செய்தார். சிறையிலிருந்து திரும்பியபின் காங்கிரஸ் ஊழியர்களை உபசரித்தும், முழுநேர அரசியலில் கலந்துகொண்டும் தனது பூர்வீகச் சொத்து முழுவதையும் இழந்தார்.
இவரது தியாகத்தை மெச்சிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும், மற்றும் பல நண்பர்களும் இவரது இழந்த சொத்துக்களை மீட்டுக் கொடுத்தனர். சேலம் நாச்சியப்பக் கவுண்டரது ஆதரவால் 1937 முதல் 1944 வரை சேலம் டிஸ்ரிக்ட் போர்டு உறுப்பினராகப் பணிபுரிந்தார். சென்னை பிரமுகரான சின்ன அண்ணாமலையால் 1938-ல் ஆரம்பிக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்ணை’ மூலம் கவிஞரின் நூல்கள் பல வெளியிடப்பட்டு ராயல்டியாகச் சிறிது வருமானம் பெற்றார். பொதுமக்களும் வரவேற்பளித்து, பணமுடிப்புகளும் வழங்கினர். சென்னை மாநகராட்சி, 1945ல் வரவேற்பளித்துக் கெளரவித்தது. இதைத் தொடர்ந்து கோவை, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, பெங்களூர், கொழும்பு முதலிய இடங்களிலும், வரவேற்புகளும் பணமுடிப்புகளும் வழங்கப்பட்டன.
1949 ஆகஸ்ட் 15-ல் சென்னை அரசாங்கம் இவருக்கு அரசவைக் கவிஞர் பட்டத்தை வழங்கியது 1956-ல் இவர் சென்னை அரசுச் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1962-ல் இரண்டாம் முறையாகவும் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1953-ல் மத்திய அரசு இவரை சாகித்ய அகாடமியின் உறுப்பினராயும், 1954-ல் அவ்வக்கடாமியின் நிர்வாகக்குழு உறுப்பினராயும் நியமித்தது. 1971-ல் இவருக்கு ‘பத்ம பூஷன்’ பட்டத்தை இந்திய அரசு வழங்கியது.
1972-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் திகதி கவிஞர் இயற்கை எய்தினார். அன்றைய முதலமைச்சர் மு. கருணாநிதியும் ஏனைய அமைச்சர்களும் விடியற் காலையிலேயே சென்று கவிஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பெருந்தலைவர் காமராஜ், திரு. சிவஞானகிராமணியார் போன்ற பல்வேறு தலைவர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
வஞ்சகமும், லஞ்சமும் நிறைந்த ஓர் அரசியல் சூழ்நிலையில் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வாழ்ந்த ஒரே அரசியல் தொண்டரை, காந்தீயக் கவிஞரை, தேசியக் கலைஞரை நாமெல்லாம் இழந்துவிட்டோம் என்று ராஜாஜி அங்கலாய்த்தார். கவிஞரிடமிருந்து ஓயாது வெளிவந்து கொண்டிருந்த காந்தீயச் சங்கநாதம் அன்றோடு ஒய்ந்தது என இவரது வாழ்க்கை வரலாறு பதியப்பட்டுள்ளது.
கவிதைகள் மூலமும், உரைநடை நூல்கள் மூலமும் நாமக்கல் கவிஞர் தமிழ் மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்கிறார்; என்றும் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.
டானியல் பாதையும் தலித்தியப் பார்வையும் ஈழத் தமிழர் மத்தியில் மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பிறந்து, வறுமையோடு தவழ்ந்து, சமூகக் கொடுமைகளுக்கு முகங்கொடுத்து, கடுமையாகப் போராடி, ஒடுக்கப்பட்டமக்களின் தளைகளை அறுத்தெறிந்து, அவர்களைச் சக மனிதர்களுடன் நிலைநிறுத்துவதற்குத் தன் உடல், பொருள், ஆவி என அத்தனையையும் அர்ப்பணித்துப் பணியாற்றி மறைந்தவர் தோழர் கே. டானியல்.
என் இளமைப் காலத்தில், என் சிந்தனைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, சரியான சமூகப் பார்வையுடன் பேனா பிடிக்க வழிகாட்டியவர்களில் முக்கியமானவர் கே. டானியல், சுமார் பதினான்கு ஆண்டுகள் அவரோடு இணைந்து பணியாற்றியதும், அவரது இறுதி மூச்சு பிரியும் வேளையிலும் உடனிருந்து உதவியதும் என்னால் மறக்க முடியாதனவாகும்.
‘தலித் இலக்கியம்’ என்பது தற்போது தமிழ் இலக்கியப்பரப்பில் எல்லோராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது விவாதிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்த நாடுகளிலும், நம்மவர் மத்தியில் இது குறித்த சர்ச்சைகள், நோக்குகள் கூர்மையடைந்து விவாதத்திற்குரியனவாகின்றன.
தலித் இலக்கியப் பிதாமகர், முன்னோடி எனத் தமிழக விமர்சகர்களாலும், ஈழத்து இலக்கியக்காரர் பலராலும் டானியல் விதந்துரைக்கப்படுகிறார். இதில் ஒரு விடயம் சுலபமாக மறக்கடிக்கப் படுவதாகத் தெரிகிறது. டானியல் ஒடுக்கப்பட்ட மக்களில், அடிமட்டச் சமூகத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே போராடியவர், எழுதியவர் என்பதாக மட்டுமே உணர்த்தப்படுகிறது. அவரது, பொதுவுடமைக் கட்சிப் பணி மறைக்கப்பட்டு, மறக்கடிக்கப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. டானியல் இன்று உயிருடன் இருந்தால் நிச்சயமாக இத்தகைய பார்வையை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
டானியல் பொதுவுடமைக் கட்சியின் தொடர்பு காரணமாகவே சமூகப் பணியில் ஈடுபடத் தொடங்கியவர். பொதுவுடமைக் கட்சியினை வடபகுதிக்கு அறிமுகம்செய்து, மக்கள் மத்தியில் பரவலாக்கி, இறுதிவரை இதற்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர் தோழர் மு. கார்த்திகேசன். அவரது தொடர்பு, டானியலை பொதுடைமை அரசியல் ரீதியாகவும் எழுத்துத்துறையிலும் வளப்படுத்தியது எனலாம்.
இளமைக் காலத்தில் வறுமையில் துவண்டபோதிலும், திருமணத்தின் பின்பும் வறுமையும் இடர்பாடுகளும் வாட்டிவதைத்தபோதிலும், பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டபோதிலும் அவர் கட்சிப் பணிகளிலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டவரல்ல. பொதுவுடமைக் கட்சியினது வடபிரதேச் கிளையின் முழுநேரச் செயற்பாட்டாளராகப் பல வருடங்கள் பணியாற்றியவர் டானியல்.
அறுபதுகளின் நடுப்பகுதியில் சர்வதேசரீதியாகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு இலங்கையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாகச் சோவியத் சார்பு, சீனச் சார்பு எனப் பிளவு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்திலும் ஏற்பட்டது.
பொரும்பாலான உழைக்கும் மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலை இலக்கியவாதிகள் தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான சீனச் சார்பு கட்சியினை ஆதரித்தனர். டானியலும் தோழர் சண் பாதையிலேயே இயங்கியவர்.
1971-ம் ஆண்டு சித்திரை மாதம் விஜயவீரா தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே. வி. பி) தொடங்கிய காட்டிக்கொடுப்பிலான கிளர்ச்சியின்போது பொதுவுடமைக் கட்சி (சீனச் சார்பு) பல பின்னடைவுகளை, அடக்குமுறைகளை, சீர்குலைவுகளை எதிர்கொண்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சிதறடிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான தோழர்கள் சிறையிடப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்தனர். தோழர் சண், காந்தி அபயசேகரா, டானியல் உட்படப் பல தலைமைத் தோழர்கள் சிறையிடப்பட்டனர். பின்னர் எழுபதுகளின் பிற்பகுதியிலும் கட்சியில் பிளவு ஏற்பட்டபோதிலும் தோழர் சண்முகதாசனின் சரியான வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டவராகவே டானியல் இயங்கியவர்.
1979-ம் ஆண்டு தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் பிரமாண்டமான முழுநாள் மாநாடு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது. ஆயிரக்கண்க்கான பிரதிநிதிகளால் மண்டபம் நிரம்பி வழிந்தது. இம்மாநாட்டின் வெற்றிக்காகப் பல மாதங்களாக இரவுபகலாக டானியல் இயங்கியதை யான் நன்கறிவேன். அவருடன் கூடவே யானும் செயற்பட்டேன். தோழர் சண் வாழ்த்துச்செய்தி அனுப்பியிருந்தார்.
டானியல், எஸ். ரி. என். நாகரத்தினம், கே. கிருஸ்ணபிள்ளை ஆகிய தலைமைத் தோழர்களின் சிறப்புரைகள் குறிப்பிடத்தக்கன. பேராசிரியர் நந்தி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், கலைஞர் சிசு. நாகேந்திரா, கலைஞர் குத்துவிளக்கு’ பேரம்பலம் உட்படப் பல கலை இலக்கியவாதிகள் மாநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.
“எனக்கு ஒர் அரசியல் பாதை உண்டு. அதற்கு உந்துசக்தியாகவே எனது படைப்புகளைத் தருகிறேன’ என டானியல் சொல்வதுண்டு. டானியல் அரசியல் செயற்பாட்டாளர். சமூக விடுதலைப் போராளி, எழுத்தாளர், பேச்சாளர்.
ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும், அந்த வடிவத்தை அடையாளம் கண்டு எதிர்க்கின்ற பக்குவமும், துணிவும், ஆற்றலும் டானியலுக்கு இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் எந்தக் குக்கிராமத்தில் வாழும் மனிதனும் தனக்குச் சாதியின் பெயரால் அல்லது ஏதாவது வகையில் ஒடுக்குதல், நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான பரிகாரம்தேடி, ஆலோசனைபெற, ஆதரவுபெற டானியலைத்தேடி வருவதை யான் பல வருடங்களாகப் பார்த்திருக்கிறேன்.
அந்த வகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் மனதில் நிறைந்த 69(5 மனிதனாக டானியல் விளங்கினார். அவரது செயற்பாடுகளுக்குப் பேருதவியாகக் கட்சித் தோழர்கள் இருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சாதியம் குறித்து நோக்கும்போது இந்திய நாட்டின் நிலைமைகளையும், இலங்கையின் வடபகுதி நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. இந்தியச் சாதியம் பிராமணியத்தால் கட்டமைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டு வருகிறது. அதற்கெதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்து பல்வேறு வழிவகையில் போராடிவருகிறார்கள். இலங்கையில் பிராமணியம் இல்லை. உயர் சைவ - கிறிஸ்தவ வேளாளர் எனச் சொல்லிக் கொள்வோரின் ஆதிக்கமே வழிவழியாக வளர்ச்சிபெற்று வந்திருக்கிறது. "வேளாளர்’ என்ற கருத்தியலை பொருளாதார ரீதியில் உயர்வுகண்ட ஏனைய சாதியினரும் முன்னெடுப் பதுண்டு.
சாதியத்திற்கு எதிராகத் தமிழ்ப் பாராளுமன்றவாதிகள் உணர்வுபூர்வமாக எத்தகைய நடவடிக்கைகளையும், போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்லவில்லை. தேர்தல் காலங்களில் மட்டும் தேவையின் பொருட்டு, “சமபந்தி போசனம்’ போன்ற ஒரு சில விளம்பர நடவடிக்கைகளை மேற்கோண்டு சாகஸங்காட்டி வந்தனர்.
இக்காலகட்டத்தில் தான் “சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை’ அமுல்படுத்தக்கோரி 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ம் திகதி சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வரலாற்றுப் புகழ்மிக்க அந்த ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுடன் முற்போக்கு எண்ணங்கொண்ட சகல மக்களும், முஸ்லீம் மக்களுட்படக் கலந்து கொண்டனர். தோழர் சண் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு வழங்கியது. பொலிசாரின் குண்டாந்தடி தாக்குதலுள்ளாகியும் நிலைகுலையாத ஊர்வலம் எழுச்சியுடன் யாழ்நகரை நோக்கி முன்னேறிச் சென்றது. இந்த ஊர்வலத்திற்குத் தலைமைகொடுத்துச் சென்றவர்களில் டானியலும் ஒருவர்.
இதன் பின்னரே “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ உதயமானது. இது ஒரு சாதிச் சங்கம் அல்ல. சாதியத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துநின்ற சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த ஒரு பரந்த இயக்கமாகவே முன்னெடுக்கப்பட்டது. இந்த இயக்கம் பல்வேறு போராட்டங்களின் மூலம் பல வெற்றிகளைக் கண்டது. தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டங்கள் யாவற்றுக்கும் உறுதுணையாக நின்று உதவியது.
தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றம் முதல் சீன வானொலிவரை இந்தப் போராட்டங்கள் குறித்துப் பேசப்பட்டன. குடாநாட்டின் இருண்ட பகுதிகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்தப் போராட்டங்கள் அத்தனை செயற்பாடுகளிலும் டானியலின் பங்களிப்பு முக்கியமானது.
சிந்தனைத் தெளிவுமிக்க, தியாகங்கள் நிறைந்த, சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்த, வெற்றிகளைக் கண்ட இந்தப் போராட்டப் பாதையே, தமிழ்த் தேசிய இனத்தின் விடிவுக்கும் முன்மாதிரியாக அமையக்கூடியது என சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளமை மிகையாகாது.
தலித்துகள் மட்டும் தான் தலித்துகளுக்காகப் போராட வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. வடபகுதியில் நடந்த, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராடடம அத்தகைய கருத்தைக் கொடுக்கவில்லை.
அது தோழர் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் பூரண ஆதரவுடன், சகல முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து நடைபெற்றது. வெற்றிகளைக் கண்டது. பல்வேறு கலை இலக்கியப் படைப்பாளிகள் இதற்கு உறுதுணையாகச் செயற்பட்டார்கள். பேராசிரியர் கைலாசபதி, பல்கலை வேந்தர் சில்லையூர் செல்வராசன், முருகையன், இளங்கீரன், அம்பலத்தாடிகள் குழுவினர் மற்றும் இளந்தலைமுறையைச் சேர்ந்த பல கலை இலக்கியப் படைப்பாளிகள் தலித்துகள் அல்ல. ஆனால் அவர்கள் இந்தப் போராட்டங்களுக்கு உறுதுணையாக நின்ற மார்க்சிசவாதிகள்.
இன்றைய சர்வதேச சூழ்நிலைகளையும் எம் நாட்டின் உண்மை நிலைமைகளையும் கவனத்திலெடுக்காது, தேசிய விடுதலை, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் தனித் தலித்திய பார்வை கொண்டு நோக்குவதும், அதற்கேற்ப டானியலைக் காட்ட முற்படுவதும் பொருத்தமற்றதாகும். இத்தகைய பார்வையை இன்று டானியல் உயிருடன் இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்.
ஏனெனில் மார்க்சிச, லெனினிசப் போராட்டப் பாதையை அரசியல் பாதையாக ஏற்றுக்கொண்டு அதற்கெனத் தன்னை அர்ப்பணித்து இறுதிவரை செயற்பட்டவர் டானியல். டானியல் வாழ்வின் பிற்பகுதியில் பல வருடங்களாக அவரோடு சேர்ந்து பணியாற்றியவன் என்ற வகையில் அவரது எண்ணங்கள். செயற்பாடுகள் எந்தவழியில் இருந்தன என்பதனை என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடியும். .
“அவரது மார்க்சிசப் பார்வையும், சாதியப் பார்வையும் முரண்படுவதாகத் தெரியவில்லை. மார்க்சிசத்திற்குள் சாதியப் பார்வை ஒத்து இயங்குகிறது.’ என்கிறார் டானியலின் படைப்புகளைப் புரிந்துகொண்ட கோவை ஞானி.
டானியலின் படைப்புகளில் குடாநாட்டின் ஒரு நூற்றாண்டு காலத்துக்கு மேற்பட்ட பகுதியின் வரலாற்று ஒட்டத்தை, சமூக நகர்வைக் கவனிக்கலாம். குடாநாட்டின், யாரும் காட்டியிராத இருண்ட பகுதிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியவர் டானியல். இதனால் தானோ சிலருக்கு அவர் வேண்டாதவராக, ஒதுக்கப்பட வேண்டியவராகத் தென்பட்டார் போலும்.!
அவரை ஒழித்துக்கட்டவும் பல முயற்சிகள் நடந்ததுண்டு. அவரோடு பல இடங்களுக்கும் சென்றுவந்த போது இத்தகைய ஒருசில நடவடிக்கைகளை என்னாலும் உணர்ந்துகொள்ள முடிந்தது.
மக்கள் பணிகளில் அயராது ஈடுபட்டதால் சிலரது பார்வைக்கு மட்டுமல்ல அரசு இயந்திரத்தின் காவல்காரருக்கும் அவர் குறிவைக்கப்பட வேண்டியராகவே இருந்தார். சந்தர்ப்பம் பார்த்து அவரை ஒழித்துவிட முயற்சித்ததுண்டு. பல மாதங்கள் அவர் சிறை வைக்கப்பட்டார். நீரிழிவு நோயின் தீவிரத் தாக்கத்திற்குட்பட்ட நிலையில் பல வேதனைகளை அவர் சிறையில் அனுபவித்தார். பல மாதங்கள் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டார்.
இறுதி காலத்தில் கண் பார்வை குன்றிவந்த லையில், நீரிழிவு நோய்க் வைக்கிய சிகிச்சை பெறும்பொருட்டும், கானல், பஞ்சகோணங்கள் நாவல்களை அச்சேற்றும் பொருட்டும், பேராசிரியர் அ. மார்க்ஸ், மற்றும் தோழமைப் பதிப்பகத் தோழர்களின் அழைப்பின்பேரில் தமிழகம் செல்ல முடிவுசெய்தார்.
தமிழகம் செல்ல முன்னர் கொழும்பில் தோழர் சண் வீட்டில் தங்கியிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினார். பஞ்சகோணங்கள் நாவல் குறித்து சண் குறிப்பிட்ட விடயங்களையும் கவனத்திலெடுத்துக் கொண்டார்.
உடல்நலம் குன்றிய நிலையிருந்த அவரை 30-01-1986-ல் தமிழகம் அழைத்துச் சென்றேன். நீரிழிவு நோயின் முதிர்நிலையின் சகல பாதிப்புகளும் அவரை வாட்டின. தோழர்களின் ஏற்பாட்டின்படி சிகிச்சைகள் நடந்தன. உடனிருந்து கவனித்து வந்தேன்.
உடல்நிலையைப் பாராது பல்வேறு இடங்களுக்கும் சென்று தோழர்களைச் சந்திக்க ஆவலாயிருந்தார். திருச்சி, தஞ்சை, சென்னை, மதுரை, பாண்டிச்சேரி, கும்பகோணம் ஆதியாம் இடங்களுக்குச் சென்றோம். கூட்டங்களில் உரையாற்றினார். பலரையும் சந்தித்து உரையாடினார். 1981-ம் ஆண்டு டானியலோடு தமிழகம் சென்றபோது, “சி. எல். எஸ்’ இலக்கியக் கருத்தரங்கில் உரையாற்றியபின், தஞ்சை பிரகாஷின் அழைப்பின்பேரில் தஞ்சை சென்றதும், அவர் பார்க்க விரும்பியது உயர்ந்த கோவில்களோ, அரண்மனைகளோ, பெரிய மனிதர்களென இருந்தவர்களையோ அல்ல. கீழ்வெண்மணியில் உயிருடன் கொளுத்தப்பட்ட ஏழைமக்களின் நினைவிடத்தைத் தான் பார்க்க விரும்பினார்.
தஞ்சைப் பிரகாஷ் எழுத்தாளர் சி. எம். முத்து ஆகியோருடன் அங்கு சென்று பார்த்தோம். பல மணி நேரம் அங்குள்ள நசுக்கி ஒடுக்கப்பட்ட கிராமத்து மக்களைச் சந்தித்து அவர் பேசியமை இன்றும் எனக்கு ஞாபகம்.
தஞ்சை தங்கசாரதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டானியலுக்கு 23-3-86 si6O)6) 8.3O மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். டாக்டர்களும், தாதிமாரும் உடனின்று சிகிச்சையளித்தனர். எனது கையைப் பற்றிப்பிடித்தவாறு 'தம்பி. தம்பி.’ என ஏதோ சொல்லவிழைந்து முடியாத நிலையில் அவரது உயிர் பிரிந்தது. இந்நிகழ்வு என்மனதில் என்றும் மறக்கமுடியாத வேதனைப் பதிவாகிவிட்டது.
படைப்பாளிகளை மிகவும் நேசித்தவர். டானியல். இளம் எழுத்தாளர்களை அரவணைத்து வழிப்படுத்தியவர். பலருக்கு விளம்பரமின்றி நல்ல உதவிகள் செய்துள்ளதை என்னால் அறிய முடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் படைப்பாளிகளை வரவேற்று உபசரித்தவர். இதனை எழுத்தாளர்கள். வ. அ. இராசரத்தினம், லெ. முருகபூபதி, அந்தனிஜிவா ஆகியோருட்படப் பலர், டானியல் காலம்ாகியதை அறிந்ததும் கண்ணிர்சிந்த எழுதியுள்ள பதிவுகளில் காணலாம்.
இறுதிவரை இலட்சியம் குன்றாத, எந்தவித விட்டுக்கொடுப்புகளுமற்ற, நம்பிக்கையான போராளியாக, படைப்பாளியாகத் திகழ்ந்த டானியல் மறைவு குறித்து இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ) பொதுச்செயலாளர் நா. சண்முகதாசன் அன்று எழுதியுள்ள வரிகள் குறிப்பிடத்தக்கன.
“இளமைக் காலம் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசக் கிளையின் நடவடிக்கைகளில் முக்கிய பங்களிப்புச் செய்தவர் டானியல். அறுபதுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட வெகுஜன இயக்க எழுச்சிக்குத் தலைமை கொடுத்தவர்களில் ஒருவர். அவரது இழப்பு இந்த நாட்டின் இலக்கியத்துறைக்குப் பேரிழப்பு. அவர் துணிவுமிக்க போராளி. நேர்மைமிக்க தோழர். நான் நல்ல தோழனை, அன்பு நண்பனை இழந்துவிட்டேன்.” - என்றவாறு தோழர் சண் வேதனையோடு எழுதியுள்ளார். அந்த மானிட நேசனின், மக்கள் விடுதலைப் போராளியின், கூர்ந்த சமூகப் பார்வையுள்ள படைப்பாளியின் நாமம் என்றும் நிலைத்து நிற்கும்.
- ‘இனி’- சஞ்சிகை டென்மார்க்
இணையத் தளங்கள்
சர்வதேசப் புகழ்பெற்ற பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சர்வதேச ரீதியாக மதிக்கப்படும். ‘மாஒ பாதை’ கம்யூனிஸ்ட் கட்சிகளின் சிரேஷ் ட ஆலோசகராக விளங்கியவருமான தோழர் என். சண்முகதாசன் காலமாகிப் பத்தொன்பது வருடங்களாகின்றன.
இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப் பட்டபோதே, பல்கலைக்கழகப் படிப்பைமுடித்து வெளியேறி கட்சியின் முழுநேர ஊழியனாகச் சேர்ந்துகொண்ட தோழர் சண்முகதாசனின் அரசியல் வாழ்வு இலங்கைப் பொதுவுடமை இயக்கத்தில் ஸ்ராலின் - ரொட்ஸ்கி தத்துவார்த்தப் பிரச்சினை எழுந்த போதும், பின்னரும் ஸ்ராலின் கொள்கைகளை வலியுறுத்தி, முன்னெடுத்து தோழர் சண் புகழ்பெற்றார். அன்று வலிமைமிக்க தொழிற்சங்கமாக விளங்கிய இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளராக விளங்கினார்.
1960களின் முற்பகுதியில் சர்வதேசப் பொதுவுடமை இயக்கம் சோவியத் யூனியன் சார்பாகவும், சீனா சார்பாகவும் பிளவுபட்டபோது, இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீனச்சார்பாக தத்துவார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். சோவியத் யூனியனின் போக்கைத் 'திரிபுவாதம்’ எனக் கண்டித்தார்.
குருஷேவ் முன்வைத்த ‘சமாதான சகவாழ்வு’ என்ற சோவியத் பொதுவுடமைச் சித்தாந்தம் மார்க்சிஸ்க் கோட்பாடுகளை, புரட்சிகரத் தத்துவத்தைத் திரிபுபடுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டி நிராகரித்தார். சீனப் பெருந்தலைவர் மாஒசேதுங் சிந்தனைகளும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்களும் சரியானவை என்ற இவரது வாதங்கள் சர்வதேச ரீதியான கவனத்தைப் பெற்றன.
1964-ம் ஆண்டளவில் கட்சி பிளவுபட்டது. கட்சியின் தொழிற்சங்க, வாலிபர் சங்க, கலை இலக்கியப் பிரிவுகளின் பெரும் பகுதியினர் சீனச் சார்பு அணியினராயினர். வடபகுதியிலும் கட்சியின் பெரும்பான்மையினர் இவர்களையே ஆதரித்தனர்.
சோவியத்சார்பு பொதுவுடமைக் கட்சியினர் அன்று முதலாளித்துவப் பாராளுமன்றப் பாதையூடாக சோசலிச சமுதாயத்தைக் காணலாம் என்று கூறி வர்க்க சமரசமாகியதைச் சண் கடுமையாகச் சாடினார். தொழிலாளி - விவசாயி வர்க்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தில் - புரட்சியினூடாகவே விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்தினார்.
1964-ல் இடதுசாரிகள் என்று சொல்லப்பட்டவர்கள் அரசுடன் இணைந்துகொண்டதை கடுமையாக விமர்சித்த சண், இது தொழிலாளி வர்க்கத்திற்கு மிகப்பெரிய துரோகம், இடதுசாரி இயக்கம் கண்ட மோசமான பின்னடைவு எனக் கண்டித்தார்.
மொஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தவரான ரோகண விஜயவீரா இடைநடுவில் நாடுதிரும்பி கட்சியில் இணைந்து தீவிர சீனச்சார்பாகக் காட்டிக்கொண்டார்.
டட்லி - செல்வா உடன் படிக்கையை எதிர்த்து நடைபெற்ற இனவாத ஊர்வலத்தில் விஜயவீரா பங்குபற்றித் தன் இனவாத சுயரூபத்தை வெளிப்படுத்திக்கொண்டார். மலையக மக்களுக்கெதிரான பிரச்சாரத்தையும் (இந்திய விஸ்தரிப்பு வாதம் என்ற வகையில்) மேற்கொண்டார். இதனால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட நிலையில் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னரே அவர் 'ஜே.வி.பி.’ என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
அந்த இயக்கத்தின் மீதும், விஜயவீராமீதும் சண் முன்வைத்த கடுமையான விமர்சனம் குறிப்பிடத்தக்கது. 'ஜே.வி.பி. என்பது மார்க்ஸிச கொள்கைகளுக்கு எதிரான ஒரு பேரினவாத சக்தியென, அன்று சண் அடையாளங் காட்டியிருந்தமையைப் பின்னர் அரசியல் விமர்சகர்கள் பலரும் ஏற்றுக்கொண்டனர்.
சீனச்சார்பானதாக, பலம் பொருந்தியதாக வளர்ந்துவரும் கட்சியைப் பிளவுபடுத்தி அழிக்கவென சோவியத் உளவு நிறுவனத்தினால் பயிற்சியளிக்கப்பட்டு அனுப்பப்பட்டவரே விஜயவீரா எனச் சண் ஒரிடத்தில் குறிப்பிட்டார்.
அன்று சண் தலைமையில் கட்சி பெரும் வளர்ச்சிபெற்று வந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் கட்சி ஆதரவாளராகினர்.
அன்று இடதுசாரி இயக்கத்திலும், பாராளுமன்ற அரசியலிலும் ஜாம்பவான்களெனச் சொல்லப்பட்ட கலாநிதி என். எம். பெரேரா, கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா, பேர்னாட் சொய்சா, டாக்டர் விக்ரமசிங்கா, பீட்டர் கெனமன் ஆகியோருக்குச் சித்தாந்த ரீதியாகச் சவால்விடக்கூடிய அறிவாற்றல், ஆழ்ந்த புலமை, எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவராக, அவர்களுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக’ சண்முகதாசன் விளங்கினார். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ஆழமான அரசியல் பேருரைகளை நிகழ்த்தும் வல்லமையுள்ளவராக மதிப்புப்பெற்று விளங்கினார்.
இலங்கையெங்கும் நூற்றுக்கணக்கான மார்க்ஸிச வகுப்புகளை, கருத்தரங்குகளை மும் மொழிகளிலும் நடத்தியுள்ளார். சண்முகதாசனின் வகுப்புகளில் கலந்தகொண்டேன் என்பது அன்று பெருமைமிக்க அரசியல் தகுதியாகச் சிங்கள, தமிழ் மக்களால் கருதப்பட்டது.
மூத்த தொழிற் சங்கவாதியாகவும், தொழில் சம்பந்தமான சட்ட விடயங்களில் நிபுணராகவும் விளங்கிய இவர், இலங்கையெங்கும் தொழில் சம்பந்தமான வழக்குகளில் தொழிலாளர் சார்பில் ஆஜராகி பல்லாயிரக்கணக்கான மக்க்ளுக்கு உதவியுள்ளார். வடபகுதியிலும் சினிமாத் தொழிலாளர் சங்கம், மில்க் வைற் சோப் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம், சிமெந்துத் தொழிற்சாலைத் தொழிலாளர் சங்கம் ஆகியனவுட்படப் பல சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் சார்பில் வழக்குகளில் ஆஜராகி வெற்றிகண்டவர். இந்த வழக்குகள் பலவற்றில் முதலாளிகள் - நிர்வாகத்தினர் சார்பில் தமிழரசு - தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சட்டத்தரணிகளே ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது. மலையகத்தில் "செங்கொடிச் சங்கம் பின்னர் ‘புதிய செங்கொடிச் சங்கம்’ ஆகியனவற்றின் மூலம் தொழிலாளர் ஐக்கியத்தைக் கட்டி வளர்க்கப் பாடுபட்டார்.
வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான போராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம் திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வட பகுதியில் ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும் உந்துசக்தியானது.
சங்கானை - நிற்சாமம், கரவெட்டி - கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம், காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மெளனம் சாதித்தவேளையில் பீக்கிங் வானொலி உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப் பாராளுமன்றத்திலும் தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது.
1969-ல் மேதினம் கொண்டாடத் தடைவிதிக்கப் பட்டபோது அத்தனை அரசியல் கட்சிகளும் பின்வாங்கிய நிலையில், தடையை மீறி கொழும்பு, யாழ்ப்பாணம், மலைநாடு ஆகிய இடங்களில் படையினருடன் மோதி ஊர்வலமும் கூட்டமும் நடாத்தி வெற்றிகண்டது சண் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
1971 ஏப்ரலில் விஜயவீரா தலைமையிலான ஜே. வி. பி. இயக்கத்தினரது காட்டிக்கொடுப்பிலான கிளர்ச்சியின்போது சண்முகதாசனும், ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், அனுதாபிகள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இக்காலத்தில் வடபகுதியிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசத் தலைவர்கள் தேடுதலுக்குள்ளாகியதால் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டனர். மக்கள் எழுத்தாளர் கே. டானியல் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்டார். கட்சி சிதறடிக்கப்பட்டது. கட்சி அலுவலகங்கள், சொத்துக்கள் சூறையாடப்பட்டன. சுமார் ஒரு வருடத்தின் பின்னரே சண், டானியல் ஆகியோர் விடுதலையாகினர்.
வெளிநாட்டவர் எவரும் அனுமதிக்கப்படாத, கட்டுப்பாடு மிகுந்த கலாச்சாரப் புரட்சிக் காலகட்டத்தில் சண்முகதாசன் சீனா சென்றார். தலைவர் மாஒவைச் சந்தித்து உரையாடினார். உலக நாடுகள், கட்சிகளின் தலைவர்களில், தலைவர் மாஒ வைப் பல முறை சந்தித்து பெருமைக்குரியவர் தோழர் சண்முகதாசன் மட்டுமே.
சீனப் பெருந்தலைவர் மாஒசேதுங் காலமாகியபின் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றிக்கொண்டவர்கள் அங்கு மா ஒவின் கொள்கைகளைப் பின்பற்றியவர்களை ஒதுக்கத்தொடங்கினர். மாஒவின் ஆதரவுடன் மகத்தான கலாச்சாரப் புரட்சியை முன்னின்று நடாத்திய மாஒவின் மனைவியுட்படப் சிறையிட்டனர். இக்காலப்பகுதியில் சீன ஆட்சிப்பீடத்தினரால் வலியுறுத்தப் பட்ட ‘மூன்று உலகக் கோட்பாடு சீரழிவுப் பாதையைக் காட்டுகிறது என சண் விமர்சித்தார் - நிராகரித்தார். இது பின்னர் உலக நாடுகளிலுள்ள புரட்சிகர இயக்கங்களின் கவனத்தை ஈர்த்தது. சண்ணின் அறிவாற்றல் மதிப்புக்குள் ளாகியது.
எழுபதுகளின் பிற்பகுதியிலும் சந்தர்ப்பவாத, சுயநலவாதிகளால் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் மேலும் பிளவு ஏற்பட்டது. இது சண் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மாஒவின் கொள்கைகளையும், புரட்சிப்பாதையையும் முன்னெடுக்க உலகமெங்குமுள்ள மாஒ பாதைக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டார். அவர்களை ஒருங்கிணைத்து மாநாடுகளை நடாத்தி கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் வழங்கினார்.
இலங்கையின் தலைசிறந்த அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் பலரும் அன்று கட்சியின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக சண்முகதாசனின் பாசறையில் வளர்ந்தவர்களாவர்.
கட்சியின் ஆதரவுடன் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களில் தம்மை இணைத்து நின்ற, ஆதரவுச் சக்திகளாகத் திகழ்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களில் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சி.தில்லைநாதன், பேராசிரியர் என். சண்முகரத்தினம், கலாநிதி சி. மெளனகுரு, கே. டானியல், சுபைர் இளங்கீரன, இ. முருகையன், எச். எம். பி. மொகைதீன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கம், என். கே. ரகுநாதன், நீர் வைப் பொன்னையன், எம். கே. அந்த னிசில், செ.யோகநாதன், செ. கதிர்காமநாதன், கே. தங்கவடிவேல், யோ. பெனடிக்ற் பாலன், சுபத்திரன், இ. செ.கந்தசாமி, கே.ஆர்.டேவிட், புதுவை இரத்தினதுரை, எஸ்.ஜி.கணேசவேல், எஸ்.வில்வராஜ், க.தணிகாசலம், செல்வ பத்மநாதன், இ. சிவானந்தன், கே. பவானந்தன், வி.ரி.இளங்கோவன், நந்தினி சேவியர், தேவி பரமலிங்கம், நல்லை அமிழ்தன், பொன் ராசா, பாஷை யூர் 8. தேவதாசன், குமார் தனபால், இராஜ தர்மராஜா, முருகு கந்தராசா, எஸ்.முத்துலிங்கம், எஸ்.கனகரத்தினம், க.இரத்தினம், கு.சிவராசா, அண்ணாவியார் கணபதிப்பிள்ளை, எஸ்.சிவபாதம், ஆதங்கராசா, நா.யோகேந்திரநாதன் ஷெல்லிதாசன், எம்.செல்லத்தம்பி, முருகு இரத்தினம், நவின் டில் (6) in gm, சோதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
யாழ்ப்பாணம் - நவாலியைப் பிறப்பிடமாகக்கொண்ட சண்முகதாசன், பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் சிறப்புப் பட்டம் பெற்றவர். பல்கலைக்கழகத்தில் அன்று சகல மாணவர்களையும் உள்ளடக்கிய மாணவர் சங்கத்தின் தலைவராக விளங்கிய காலம் முதல் புரட்சிவாதியாக செயற்பட்டு வந்தவர். யான் பிலிப்பைன்ஸ் நாட்டில், ஐக்கிய நாடுகள் தொண்டராகப் (UNV) பணியாற்றிவிட்டு நாடு திரும்பியதும் தோழர் சண்முகதாசனைச் சந்தித்து உரையாடச் சென்றேன். அப்போது பிலிப்பைன்ஸ் நாட்டு அனுபவங்கள், அங்குள்ள அரசியல் நிலைமைகள், மக்களின் வாழ்நிலை, போராட்டங்கள் குறித்துப் பேசினேன். என்னே. ஆச்சரியம். அங்குள்ள அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்பாடு, புதிய மக்கள் படையின் போராட்டம், மின்டனாவோ மாநிலத்தில் இயங்கும் மோரோ தேசிய விடுதலை முன்னணியின் போராட்டம், மேற்கு மின்டனாவோவில் முஸ்லிம் மக்களுக்கான, பெயரளவிலான சுயாட்சி அரசு என்பன குறித்தெல்லாம் அற்புதமாக எடுத்துச் சொன்னார்.
அங்கு நேரில் பார்த்துவந்த எனக்கு அவரது விளக்கங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தன. ஆம். அது தான் அவரது அறிவாற்றல். உலகின் எந்த நாட்டினதும் அரசியல் வரலாறு, நடப்பு நிலைமை, பொருளாதாரம், போராட்டங்கள் குறித்துக் கேட்டாலும் மூன்று மொழிகளிலும் விளக்கமளிக்கும் அற்புத ஆற்றல் அவருக்கிருந்தது.
தோழர் சண் கலை இலக்கியப் படைப்புகள் குறித்தும் மதிப்பிட்டு நெறிப்படுத்தும் தகமையுள்ளவர். ஒருமுறை, அமெரிக்க கறுப்பின மக்களின் வரலாற்றை ஓரளவு வெளிப்படுத்தும் “வேர்கள்’ (Roots) நாவல் குறித்தும், முன்னர் வடசீனாவில் ஏற்பட்ட வரட்சி - பஞ்சம் குறித்து நெக்குருகச் சித்தரிக்கும் (தமிழிலும் வெளிவந்தது, பெயர் ஞாபகத்தில் இல்லை) ஒரு நாவல் குறித்தும், டானியலின் படைப்புகள் குறித்தும் அவரோடு பேசிக் கொண்டது ஞாபகம்.
டானியலின் படைப்புகளை அவர் தொடர்ந்து வாசிப்பவர். டானியல் இறுதியாகத் தமிழகம் புறப்பட முன்னர் கொழும்பில் சண் வீட்டில் ஒரு சில தினங்கள் தங்கியிருந்தார். முன்னதாக சண்ணிடம் தனது அச்சேறாத பஞ்சகோணங்கள்’ நாவல் பிரதியைப் படிக்கக் கொடுத்திருந்தார். நாவலை முழுதாகப் படித்து முடித்த சண், அந்த நாவலின் முடிவில் மாற்றம் செய்வது நல்லது என டானியலிடம் குறிப்பிட்டது எனக்கு இன்றும் ஞாபகம். அதன்படியே டானியல் நாவலின் முடிவில் சிறிது மாற்றஞ்செய்து பிரசுரத்திற்கெனப் பேராசிரியர் அ. மார்க்ஸிடம் கொடுத்தார்.
1983-ம் ஆண்டுக்குப் பிறகு பேரினவாத ஒடுக்கு முறையின் உக்கிரம் தமிழ் மக்களைப் போராட்டப் பாதைக்கு உந்தித் தள்ளியதிலுள்ள நியாயத்தைச் சண் ஆதரிக்கத் தவறவில்லை. ஆனால், இதற்கும் சிங்கள முற்போக்குச் சக்திகளைப் புறம்தள்ளிய, தமிழ்த் தேசிய வாதத்திற்குள் மூழ்கிய சில தளம்பல் இடதுசாரிகளின் செயற்பாட்டிற்கும் மிக்க வேறுபாடு உண்டு.
சண் என்றும் சர்வ தேசிய வாதி யாகவே விளங்கினார். மனித சமத்துவம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் எழுச்சி, போராட்டங் களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என்ற கொள்கையி லிருந்து அவர் வழுவியதில்லை.
சர்வதேச தொழிற்சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான டொலர்கள் சம்பளத்தில் பணிபுரிய அழைப்புகள் கிடைத்தும், கொள்கையிலிருந்து கொஞ்சம் வழுவிக் கோடீஸ்வரனாக வாழ வழியிருந்தும், கொண்ட கொள்கைக்காக இறுதிவரை நேர்மைமிக்க சாதாரண மனிதனாகவே வாழ்ந்தவர். இவரது மனைவியும் இறுதிவரை இவரது இலட்சியங்களுக்கு ஏற்ப உற்றதுணையாகவே கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வாழ்ந்தவர்.
தோழர் சண் எழுதிய தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளிலான மார்க்ஸிச விளக்கக் கட்டுரைகள் ஏராளம். பல நூல்களையும் இம்மொழிகளில் எழுதியுள்ளார். அவற்றுள் ‘மார்க்ஸிச நோக்கில் இலங்கை வரலாறு, தமிழ்ப் பேசும் மக்களின் விடுதலைப் பாதை எது, வாழ்க்கை வரலாறு குறித்த நூல்’ என்பன மிக முக்கியமான நூல்களாகும். சண் காலமாகிய பின்னரும் அவரது பல கட்டுரைகள் நூலுருப் பெற்றுள்ளன.
இருதய நோயினால் பாதிக்கப்பட்ட சண் இறுதிக் காலத்தில் இங்கிலாந்திலுள்ள மகளுடன் தங்கியிருந்தபோது 1993-ம் ஆண்ட மாசி மாதம் 10-ம் திகதி 74-வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். வாழ்நாள் எல்லாம் எந்த இலட்சியத்திற்காக உழைத்தாரோ, அந்த தத்துவத்தைத் தந்த பேராசான் கால மார்க்ஸ், கைகேர்ட் பக்கத்திலுள்ள சமாதிப் பூங்காவில் அடக்கமானார். காலமார்க்ஸ் காலமாகி 110-வது ஆண்டில் தோழர் சண்முகதாசன் பேர்மிங்காமில் அடக்கமானார்.
சர்வதேசப் புகழ்பெற்ற, ஒரு நேர்மையான அரசியல், தொழிற்சங்கவாதி, மார்க்ஸிசத் தத்துவ ஆசான் சண்முகதாசன். அவரது இழப்பு மார்க்ஸிச அறிவுலகுக்கு மட்டுமன்றி இலங்கைத் தொழிலாள, விவசாய வர்க்கத்திற்கும், ஒடுக்குமுறைக்குள்ளான சகல மக்களுக்கும் பேரிழப்பு என்பதில் ஐயமில்லை.
கொழும்பில் இயங்கும், மார்க்ஸிச கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம் சண் எழுதிய நூல்கள், கட்டுரைகளின் தொகுப்புகள் ஆகியவற்றை வெளியிட்டுவருவதுடன் கருத்தரங்குகள், அவரது நினைவுச் சொற்பொழிவுகளையும் ஒழுங்குசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- 'இணையத் தளங்கள்
பாரம்பரிய மருத்துவத்துக்கு சரபோஜி ஆற்றிய பணி!
தமிழகத்தில்ே சோழர்ஆட்சிக் காலத்தில் ஆயுர்வேத மருத்துவமுறை ஓரளவு வளர்ச்சிக் கண்டிருந்தது. கி. பி. 1063-1069 ஆண்டுக்காலத்தில் ஆட்சிசெய்த வீரசோழன் காலத்திற்குரிய திருமுக்கூடற் கோயிற் சாசனம் மூலம் அக்காலப்பகுதியில் ‘வீரசோழன் ஆதுலசாலை’ என வழங்கப்பட்ட வைத்தியசாலை பற்றிப் விவரங்கள் தெரியவந்துள்ளன.
வீரசோழன் வைத்தியசாலையிற் பல சிகிச்சைப் பிரிவுகளும், மருந்துகளும் இருந்தனவென்றும், வைத்தியர்கள் பலர் கடமையாற்றினர் எனவும், மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட மருந்துகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டனவென்றும் சாசனத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.
மருத்துவத்தைப் பாதுகாத்த மன்னர்
பிற்காலத்தில் தமிழக மருத்துவத்துறையில் பெருந்தொண்டாற்றியவராகத் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னருட் பெரும் புகழ்பெற்ற சரபோஜி விளங்குகிறார். இவர் காலத்திலேயே (கி. பி. 1798-1832) தஞ்சை பூரீ சரஸ்வதி மகால் நூல்நிலையம் பார்புகழும் கலைக்கோயிலாகியது.
மன்னர் சரபோஜி பல மொழிகளில் அநேக நூல்களை இயற்றியுள்ளார்; தொகுத்துள்ளார். இவர் சிறந்த கவிஞர்; மருத்துவர்; கலைஞர். பல நூல்களை மராத்திய மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவரது பன்மொழிப் புலமை மொழிபெயர்ப்புகளுக்கும், நூல் சேகரிப்புக்கும் நன்கு உதவியது. சமஸ்கிருதத்தில் நான்கு நூல்களையும், மராத்திய மொழியிற் பதினைந்து நூல்களையும், வேறுமொழிகளில் சில நூல்களையும் இயற்றியதோடு, பல வித ஆராய்ச்சிகளின் பயனாய்க் கிடைத்த மருத்துவ அநுபவ உண்மைகளைத் தமிழிலும் நூல்களாகத் தொகுத்துள்ளார்.
தன்வந்திரி மகாலின் சிறப்பு
தஞ்சையில் "தன்வந்திரி மகால்’ எனும் ஆராய்ச்சிக் கழகத்தை ஏற்படுத்தி வைத்தியத்துறையில் ஆர்வமுள்ள அநேகருக்கு ஊக்கமளித்தார். இந்த ஆராய்ச்சிக் கழகத்தில் வைத்திய நிபுணர்கள், ஆயுர்வேத, சித்த, யூனானி முறைகளை ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து அனுபவங்களையும், அபிப்பிராயங்களையும் அட்ட வணைப்படுத்தினர். அட்டவணைப் படுத்தப்பட்ட ஆராய்ச்சிகள் செய்யுள் வடிவாக்கப்பட்டு ஏடுகளில் எழுதப்பட்டன. தமிழிலே தயாரிக்கப்பட்ட அட்டவணைகள் பல, மராத்திய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.
ஏராளமான பொருட்செலவில் மருந்துகள், தன்வந்திரி மகாலில் தயாரிக்கப்பட்டு மக்கள் நலனுக்காகத் தேர்ந்த வைத்தியர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. அன்று தன்வந்திரி மகாலில் நீண்ட காலம்வரை உபயோகிக்கக் கூடிய வகையிலே தயாரிக்கப்பட்ட சில மருந்துகள், தஞ்சையில் இன்றும் சில பழம்பெரும் குடும்பத்தாரிடம் கிடைக்கின்றன.
தன்வந்திரி மகால் உபயோகத்திற்கென்ற அரண்மனைப் பகுதியில் ፍ9 (Ù மூலிகைத் தோட்டமும் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வைத்தியர்கள் பச்சிலைகளின் அடையாளங்களைச் சுலபமாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, இயற்கையான வர்ணங்களில் முக்கியமான பல பச்சிலைகளின் சித்திரங்கள் புத்தக ரூபமாக்கப்பட்டுள்ளன. அப்பச்சிலைச் சித்திரங்களைத் தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்திலே இன்றும் காணலாம். அன்றைய ஒவியர்களின் கலைநுட்பம்-கைவண்ணம்தான் எத்தகையது வர்ணங்கள் இன்றுதான் தீட்டப்பட்டவை போல மிளர்கின்றன.
பல்வேறு தேச மதத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அன்று தன்வந்திரி மகாலில் கடமையாற்றினர். தற்போது தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலையத்தார் தமிழிலும், மராத்தியிலும் மற்றும் மொழிகளிலும் வெளியிடும் மருத்துவ நூல்கள், சரபோஜி மன்னரால் தன்வந்திரி மகாலில் தொகுக்கப்பட்ட வைத்திய அட்டவணைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவையாகும்.
சரஸ்வதிமகால் ஒரு பொக்கிஷம் உலகில் சிறந்த ஏட்டுப்பிரதிகள் கொண்ட நூல்நிலையம் பல இடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்ட மன்னர் சரபோஜி ஏராளமான பொருட்செலவிற் கணக்கற்ற நூல்களை விலைக்கு வாங்கியும் வாங்க முடியாதவற்றின் பிரதிகளைச் சேகரித்தும் உதவியதன் பயனாய் இன்று தஞ்சை சரஸ்வதி மகால் நூல்நிலையம் உலகிற் சிறந்த ஏட்டுப்பிரதிகள் கொண்ட நூல் நிலையமாக விளங்குகிறது.
சமஸ்கிருதத்தில் எண்ணற்ற நூல்களைச் சேகரித்த மன்னர், அகத்தியர், தேரையர், ப்ரம்ஹமுனி, மச்சமுனி, தன் வந்திரி, சட்டைமு னி, யுகிமு னி, திரு மூலமு னி, சொங்கணர் போன்ற ரிஷிகளும் மற்றும் பல பெரியார்களும் இயற்றிய தமிழ் மருத்துவ நூல்களையும் சேகரித்து வைத்துள்ளார்.
கெளரி நாடி, தும் மல் சாத்திரம், நாடி சாத்திரம், ஜ்வரசாத்திரம், சர்ப்பாரூடம், வாஜிகரணம் (காயகல்பம்) சஸ்திரவிதி (இரண சிகிச்சை ஆயுதங்கள்) விஷவைத்தியம், மந்திரவைத்திய சாத்திரம், ரசக் குவைப்பு, சரவாதம், சரக்குகத்தி, மிருக வைத்தியம் முதலிய விடயங்களைப் போதிக்கும் நூல்களையும் மன்னர் சேகரித்துள்ளார். ஆனால் இவற்றில் சிலவற்றை இயற்றியவர்களின் பெயர்களை அறிய முடியவில்லை. சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு மொழிகளில் எழுதப்பட்ட காம சாத்திர நூல்களும் பல உள்ளன. இவை மருத்துவ பாகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும்.
இந்திய மொழி அச்சகம்
மன்னர் அரண்மனையிலேயே நவ வித்தியா கலாநிதி வர்ணயந்திரசாலை’ என ஒர் அச்சகத்தை ஏற்படுத்தி அதில் நூல்கள் பலவற்றையும் அச்சேற்றி வந்தார். அக்காலத்தில் இந்திய மொழிகளுக்குரிய வேறு அச்சகங்கள் ஏற்படவில்லையென்று குறிப்பிடப்படுகிறது. மன்னர் தான் சேகரித்து ஆராய்ந்து எழுதிய நூல்கள் யாவும் அச்சேற்றப்பட முன் (1832) காலமாகியமை பாரம்பரிய மருத்துவத் துறைக்குப் பேரிழப்பாகும்.
இலவச மருத்துவம்
மக்கள் நலனுக்காக பல மருத்துவ நிலையங்களை நிறுவிய மன்னர் அவற்றில் இந்திய டாக்டர்களையும், ஆங்கிலவைத்திய நிபுணர்களையும் நியமித்திருந்தார். நோயாளிகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டதுடன், நோய் குணப்பட்டு தம் இருப்பிடம் திரும்புவோரின் நிலையறிந்து வெகுமதிகளும் வழங்கப்பட்டனவாம்.
அக்காலத்தில் புகைப்படம் பிடித்தல் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால் நோயாளிகளின் கண்கள் முதலிய வெளித்தோற்ற அங்கங்கள் சிறந்த ஒவியர்களைக் கொண்டு இயற்கை வர்ணங்களிற் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. கண்நோய் மருத்துவப் பிரிவில், நோயுற்ற கண்களின் சித்திரங்கள் அழகுற வரையப்பட்டு நோயாளியின் விவரம், நோய்களின் விவரங்கள், சிகிச்சை முறைகள் யாவும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தகங்கள் தஞ்சை சரஸ்வதி மகாலில் இன்றும் உள்ளன. பார்வை இழந்த ஒருவருடைய கண்ணில் ஊசி குத்தி முறிந்துவிட்டது. கண்ணில் தங்கிய அந்த உடைந்த ஊசியை சாமணம் என்னும் ஆயுதத்தால் எடுக்கப்பட்டதான விவரங்கள் உட்படப் பல விவரங்கள் அந்தப் புத்தகங்களில் உள்ளன.
மேல் நாடுகளிற் பிரசுரமான பல நூல்களைக்கூட மன்னர் சரபோஜி நூல் நிலையத்திற்கெனச் சேகரித்துள்ளார். ரணவைத்திய சாத்திரம், தாவரசாத்திரம், உடற்கூறுசாத்திரம், மிருக வைத்தியம் போன்ற பல சாத்திரங்களைக் கூறும் நூல்களை அவர் சேகரித்துள்ளார். மன்னர் சரபோஜி தயாரித்த உடற்கூறு சாத்திரப் புத்தகங்கள் அழகிய பெரிய படங்கள் அடங்கியவை. -
பல்கலை வேந்தர் சரபோஜி மன்னர் பல கலைகளிலும் வல்லவர். அவர் சிறந்த மருத்துவர், கலைஞர் மட்டுமல்ல சிறந்த வேட்டைக்காரர். குதிரையேற்றத்திலும், குறிபார்த்துச்சுடுவதிலும் வல்லவர். மிருக வளர்ப்பு, பறவைகள், மிருக வைத்தியம் சம்பந்தமான பல ஓவியங்களையும் வரைவித்துள்ளார்.
பல நாட்டு உணவு வகைகளைப் பற்றியும் அவற்றின் நன்மைகள் குறித்தும் ஆராய்ந்து பாக சாத்திர நூல்களையும் எழுதுவித்துள்ளார். சரபேந்திர பாக சாத்திரம் என்னும் நூல் அவரால் தொகுக்கப்பட்டதாகும். ஆனால், இதன் முழுப்பிரதி தற்போது கிடைக்கவில்லை.
மைந்தர் சிவாஜி பணி
முப்பத்திநான்கு ஆண்டுகால ஆட்சியின்பின் 1832-ல் மன்னர் சரபோஜி காலமானார். அவருக்குப்பின் அவரது மைந்தர் சிவாஜி தந்தையாரின் பணிகளைத் தொடர்ந்தார். பலர் இயற்றிய உடற்கூறு சாத்திரப் படப்புத்தகங்கள், சிவாஜியால் சேகரித்துத் தொகுக்கப்பட்டன. பல வெளிநாட்டினர் இக்காலத்தில் தஞ்சைக்கு விஜயம் செய்து சரஸ்வதி மகா லைப் பார்வையிட்டுப் பாராட்டிச் சென்றுள்ளனர்.
கி. பி. 1855-ல் மன்னர் சிவாஜி காலமான பின்னர் அவருக்கு ஆண் சந்ததி இல்லையென்ற காரணத்தைச் சொல்லி ஆங்கில ஆட்சியினர் தஞ்சை சமஸ்தானத்தையே கபளிகரம் செய்துவிட்டனர். பிற்காலத்தில் மன்னர் குடும்பத்தினரதும், பொதுமக்களினதும் இடையறாத முயற்சியினாலும், நடவடிக்கைகளாலும் சரஸ்வதி மகால் சொத்துக்கள் அழிவுறாமலும், சேதப்படுத்தப்படாமலும் காப்பாற்றப்பட்டன.
மன்னர் குடும் பத்தின் வாரிசான சத்ரபதி பிரதாபசிம்ஹராஜ சாஹேப் 1927-ம் ஆண்டுமுதல் சரஸ்வதி மகால் நிர்வாகக் குழுவில் ஆயுள் அங்கத்தவராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
சரபேந்திர வைத்திய வெளியீடுகள்
தற்போது மத்திய அரசின் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிர்வாகக் குழுவொன்று சரஸ்வதி மகாலை நிர்வகித்து வருகின்றது. பல்துறை நிபுணர்கள் வைத்திய நிபுணர்கள், ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு நூல்கள் ஏடுகள் யாவும் ஆய்வு செய்யப்பட்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன.
மன்னர் சரபோஜியின் தன்வந்திரி மகால் ஆராய்ச்சிக் கழகத்தில் ஆராயப்பட்ட அட்டவணைப் படுத்தப்பட்ட நூல்கள் சரபேந்திர வைத்தியம் என்ற பெயரில் தொடர்ந்து நூல்களாக வெளியிடப்படுகின்றன. சரபேந்திரர் என்பது மன்னர் சரபோஜியின் சிறப்புப்பெயராகும். தமிழில் மாத்திரமன்றி மராத்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நூல்கள் வெளியிடப்படுகின்றன.
இன்று தஞ்சைப் பெருங்கோயிலையும், மன்னர் அரண்மனையையும், தமிழ்ப்பல்கலைக்கழகப் பணிகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயமாக சரஸ்வதி மகாலை அலட்சியப்படுத்திவிட முடியாது. கலை இலக்கிய மருத்துவ ஆய்வாளர்களுக்கு அது ஒரு பொக்கிஷம்.
- முரசொலி வாரமலர்' (யாழ்ப்பாணம்)
23 - O - 1989
புலம்பெயர்ந்த எம்மவர் பண்பாட்டு வாழ்வியலில் வழக்கொழிந்துவரும் சொற்பதங்கள் எம்மக்கள் காலங்காலமாகச் சொந்த மண்ணில் ஒன்றுபட்ட சமுதாயமாக வாழ்ந்து, தெரிந்துகொண்ட நடைமுறைகளும், பேணிவந்த நெறிகளும் சேர்ந்த ஒரு தொகுதியே எம்பண்பாடு எனக்கொள்ளலாம். குறிப்பிட்ட மக்களால் பேசிப்பெற்றுக்கொள்ளப்பட்ட கருத்துகளும், அந்தச் சமுதாய வழக்கில் பேணப்பட்ட பழக்க வழக்கங்களும் இதனுள் அடங்கும்.
மக்கள் கூட்டத்தின் நம்பிக்கை அறிவாற்றல், கட்ைப்பிடிக்கும் ஒழுக்கநெறிகள், நீதிநெறி ஒழுங்குகள், பழக்க வழக்கங்கள் யாவும் பண்பாட்டு வாழ்வியலில் அடக்கமாகும். காலமாற்றத்திற்கேற்ப மதநம்பிக்கைகள், கல்விமேம்பாடு, விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சி, கலை இலக்கிய வளர்ச்சி செயற்பாடுகள், உற்பத்தி உறவுகள் யாவும் பண்பாட்டு வாழ்வியலைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.
அன்று யாழ்ப்பாணப் பிரதேசம் தீவுப் பகுதி, வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி - பச்சிலைப்பள்ளி எனப் பெரும் பிரிவுகளாக வகுக் கப்பட்டிருந்தன. இப்பிரிவுகளுக்கிடையே பண்பாட்டு அடிப்படையில் சிறிதளவு வேறுபாடுகள் அல்லது விசேட தன்மைகள் காணப்படுவதுண்டு. இருப்பினும் யாழ்ப்பாணப் பிரதேசப் பண்பாடு என்று கூறும்போது அதிகளவு பொதுவான பண்பாட்டு அம்சங்களே குறிப்பிட்டுக் கூறத்தக்கன.
பண்பாட்டுக் கோலங்களை அறிந்துகொள்ள, உணவு தயாரிப்பு, வீடுகளின் அமைப்பு, வீட்டுப்பாவனைப் பொருட்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள், திருமணம் மற்றும் சடங்குகள் - நடைமுறைகள், தொழிற்சாதனங்கள் என்பன உதவுமெனக் கூறுவர். ஒவ்வொரு காலப்பகுதியிலும் வாழும் மக்களின் தேவைக்கும், இடத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு சொற்கள் பேச்சுவழக்கில் திரிந்தும், குன்றியும், விரிந்தும் வழங்குகின்றன. சில வழக்கொழிந்துபோய்விடுகின்றன.
ஒரு பொருளை உணர்த்த ஒரு குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில் பயன்பாட்டிலிருந்த சொல் காலமாற்றம், இடமாற்றம் காரணமாக தேவையற்றதாக வழக்கிழந்து போகலாம். பேச்சுவழக்கிலேயே இத்தகைய வழக்கிழந்துபோகும் தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. இடத்திற்கேற்ப, விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் புதிய சொற்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளமையையும் அறிந்துகொள்ள முடியும்,
எம் சொந்த மண்ணில் அன்று சாதாரணமாக வழக்கத்திலிருந்த உணவு வகைகள், இன்று இடமாற்றம், வருவாய், வேலைப்பளு, நேரமின்மை, நாகரீகம் - அந்தஸ்து கருதிய நிலையில் மாற்றமடைந்து அங்கும் சரி, இங்கு புலம்பெயர்ந்த மண்ணிலும்சரி புதிய உணவுவகைகள் பல வழக்கத்திற்கு வந்துவிட்டன அல்லவா.
புலம்பெயர்ந்த மண்ணில் உணவுமுறையில் மாத்திரமல்ல உடை, வீடு, அலங்காரப் பொருட்கள், சடங்குகள் உட்பட எம்மவரின் பண்பாட்டுக் கோலங்கள் பலவும் மாற்றமடைந்து வருவதை உணரமுடியும். புலம்பெயர்ந்த எம்மவரின் பண்பாட்டு வாழ்வியலில் வழக்கொழிந்துவரும் சில சொற்பதங்களை நோக்குவோம்.
உணவு
பனாட்டு, புழுக்கொடியல், ஒடியல், பனங்கட்டி, பனங்கற்கண்டு - கல்லாக்காரம் - பனைவெல்லம், பூரான் - தகன்கொட்டை, கள், பதநீர் - கருப்பநீர், பனங்குருத்து, ஒடியல் கூழ், பனங்காய்ப் பணியாரம், சாமை, தினை, வரகு, எள்ளுப்பாகு, புக்கை, அடுவல்சோறு, பழந்தண்ணி - பழஞ்சோறு, வடலி, பனை ஒலை - காவோலை - குருத்தோலை, கங்குமட்டை, சில்லாடை மட்டை, விறகு, கொக்கரை, பன்னாடை, பாளை, ஈக்கு, நார், ஊமல்கொட்டை, ஈருமணி, நார்க்கயிறு, குரும்பட்டி, நுங்கு, சீக்காய், பனங்காய், பாத்தி - நாற்றுப்பாத்தி, பனம்பாத்தி - காலப்பாத்தி, முளை, பனங்கிழங்கு, வேலி, கிடுகுவேலி, மட்டைவேலி, சீமால்வேலி, தென்னை மட்டை, தென்னோலை, தென்னம்பாளை, இளநீர், முட்டுக்காய், செத்தல் தேங்காய், ஒல்லித்தேங்காய், கிடுகு, பொச்சுமட்டை, படலை, சங்கடப்படலை, கண்டி, - கண்டாயம் - பொட்டு, கடப்பு, குத்தூசி, கடகம், பெட்டி, அடுக்குப்பெட்டி, நீத்துப்பெட்டி, வெற்றிலைப் பெட்டி, பட்டை, தட்டுவம், பிளா, திருகணி - திருகணை, குடுவை, குட்டான், தடுக்குப்பாய், புற்பாய், கொட்டைப்பெட்டி, கிலுக்குப்பெட்டி, அரிப்பெட்டி, பறி, ஈர்கோலி,
உமல் - பன்னுமல் - களத்துமல், பத்தாயம், ஏறுபெட்டி, தளநார், முட்டி, கத்திக்கூடு, பீலிப்பெட்டி, துலா, ஒடுஈருமணி, நத்தை, ஆடுகால், மாட்டுத்தொழுவம் - மாட்டுமால், குடில் - குடிசை, வரம்பு, கிணறு, வட்டக்குண்டு - வற்றாக்குண்டு வாய்க்கால் - பேர்வாய்க்கால் - கைவாய்க்கால், மழை - துமி - துந்துமி - தூறல், சாரல், உழவு, சால் - உழவுசால், மறையடித்தல், தண்ணி மாறுதல், கொத்துதல் - சாறுதல் - பெருந்தம்பல் கண்டுகட்டுதல் - அணைத்தல், குருக்கன் அடித்தது, விதைப்பு, நாற்று நடுதல், உரம் எறிதல், களை பிடுங்கல், அரிவுவெட்டு - அறுவடை, படங்கு, களப்பாய் - கதிர்ப்பாய் - உலர்த்துப்பாய், சூடு வைத்தல், சூடு மிதித்தல், பொலியன், போர் - சாணம் - கடைசிப் பொலியன், தூற்றல், களத்துமணி, சாக்கு, மூடை மண்வெட்டி, கலப்பை, கொழு, நுகம், அலவாங்கு, கடப்பாரை, ஏடு, எழுத்தாணி, பாக்குவெட்டி, கொடுவாக்கத்தி, சத்தகம், கொக்கைத்தடி, கொக்கைச் சத்தகம், காம்புச் சத்தகம், கோடரி - கோடாலி, பெட்டகம், கோர்க்காலி, தைலாப்பெட்டி, நாற்காலி, முக்காலி, கதவுநிலை, வளை, முகடு, கூரை, ஒட்டறை, புகடு, அடுப்பு, செத்தை, குசினி, - அடுக்களை, உறி, சருவக்குடம், பானை, பொங்கல், உலை, கோடிப்பக்கம், கொல்லை, சிம்மாடு, ஏணை, தொட்டில், தேர், சகடை, வாகனம், திருவாசி, சப்பறம், சிகரம், மேளதாளம், சின்னமேளம், திருவிழா, கொடிமரம், பூங்காவனம், மடப்பள்ளி, வள்ளம், வத்தை, தோணி, டிங்கி, பாய்க்கப்பல், பாய்மரம், சுக்கான், கட்டுமரம், அணியம், நங்கூரம், புகைவண்டி, மோட்டார்வண்டி, றிக்சோ, சுமைதாங்கி, கேணி, ஆவுரோஞ்சி, மடம், திண்ணை, கூடாரவண்டில், ஒற்றைமாட்டு வண்டில் - ஒற்றைத்திருக்கல் - ஒற்றைக்கரத்தை, வில்லுவண்டி, வண்டில், நாம்பன், எருது, பயிநாகு - பசு, மறி - ஆடு, கிடாய், கடுவன், பெட்டை, செம்மறி, சேமறிமாடு - மனையாமாடு, உடும்பு, ஒணான், பல்லி, புலிமுகச்சிலந்தி, தட்டான், குறவனன்புழு, கொடுக்கான்,
நட்டுவக்காலி, மைனா, செண்பகம், மணிப்புறா, சடங்கு - அலங்காரம், தரகர் - புரோக்கர், வேட்டி - எட்டுமுழ வேட்டி, நாலுமுழ வேட்டி, பஞ்சகச்சம், கொடுக்கு, கச்சை - கோவணம், சண்டிக்கட்டு, சீலை - தாறுபாய்ச்சிக் கட்டுதல், மடிசார் கட்டு, குறுக்குக் கட்டு, தட்டுடுப்பு - பின் கொய்யகம், முன் கொய்யகம், மார்புக்கச்சை, சால்வை, தலைப்பாகை, ஆலாத்தி, தோயவார்ப்பு, கடுக்கண்பூணல், கால்மாறல், குடுமி - முன் குடுமி, பின் குடுமி, சிமிக்கி, கொலுசு மூரி உலக்கை எறிதல், குறிப்பு, சாதகம், சோதிடம்அரைஞாண்கொடி - அறுநாக்கொடி (வெள்ளி - கயிறு) சாணைச்சீலை, காது குத்தல், மடி - மடியில் கைவைத்தல் - மடிப்பிச்சை கடுக்கண், மூக்குத்தி, தட்டம், தாம்பாளம், குத்துத் தாம்பாளம், வெற்றிலைத்தட்டு, வட்டிலி கைவிளக்கு, லாம்பு, துடக்கு - துடக்குக்கழிவு - தீட்டுக்கழிப்பு, தூமைச்சீலை, சாமத்தியவீடு, தண்ணிர் வார்ப்பு களி - உழுத்தங்களி, சிப்பிப் பலகாரம் - பணியாரம், சீனி அரியதரம் ஒட்டு ரொட்டி - வெள்ளை ரொட்டி, சிலாவு ரொட்டி, பயத்தம் பணியாரம், முறுக்கு, பால் அப்பம் - வெள்ளை கொழுக்கட்டை, மோதகம், வடை, வாய்ப்பன், சம்மந்தம் பேசுதல், கூறைச்சீலை, பட்டு வேட்டி, காப்புக் கட்டுதல், கங்கணம் கட்டுதல், பணிக்கை வெட்டுதல், முருக்கமரம், கன்னிக்கால், ஓமம் வளர்த்தல், தாலி கட்டுதல், மெட்டி போடுதல், சாந்தி முகூர்த்தம், கால் மாறுதல், நாவூறு - கண்ணுாறு, முழுவியளம் - முழுவிசேடம் பல்லி சொல்லுதல், காகம் கத்துதல், நாய் ஊழையிடுதல்,
சிவிகை - பல்லக்கு, குறி வேர்வை - இராசநோக்காடு, படையல் - மடை, வேள்வி, குளுத்தி - குளிர்த்தி, கரகம், காவடி, உடுக்கடி, உரு - சன்னதம், கூத்து, வில்லுப்பாட்டு, பக்கப்பாட்டு, செலவு சித்தாயம், சாமான் சக்கட்டு, சீலம்பாய், சேடம் இழுப்பு, பால்பருக்கல், காடாத்து, நக்கினதானம், எச்சி, எட்டுச்சடங்கு, அந்தியேட்டி, வீட்டுக்கிருத்தியம், மாளயம், ஆட்டத்திவசம், திவசம், பறுவம், அமாவாசை, அட்டமி, நவமி, பஞ்சமி, திதி, உறவு அப்பு, ஆச்சி, ஆத்தை, பெரியம்மா, ஆசையம்மா, சீனியம்மா, குஞ்சியம்மா, பெரியப்பு, ஆசையப்பு, சீனியப்பு, குஞ்சியப்பு, மாமி, அப்புமாமி, அத்தை, அத்தாச்சி, அம்மான், மச்சான், மச்சாள், நிர்வாகம் மணியகாரன், விதானையார் - தலைமைக்காரன், சட்டம்பியார் - வாத்தியார், நயினார், நாச்சியார், ஒழுங்கை - கையொழுங்கை - குச்சொழுங்கை வழி, ஒடை, சந்து, முடக்கு, தெரு, வாடைக்காற்று, சோளகக்காற்று, கொண்டல்காற்று, கச்சான்காற்று, மம்மல்பொழுது, அந்திப்பொழுது, செக்கல்பொழுது, ஈராட்டி, மூடம் கட்டுதல், சாமம், நடுச்சாமம், ஏமம்சாமம், விடியற்புறம், செடில் நாற்றம் - செணி நாற்றம், சொத்தை, சொக்கை, நோஞ்சான், பரவணி - பரம்பரை, கசவாரம் - ஈச்சாப்பி, பிரசித்தம் அடித்தல், நாக்குவளைப்பு, கண்டாமணி, தூண்டாமணி விளக்கு, குத்துவிளக்கு, கும்பம், குடம், ஊதுபத்தி, சாம்பிராணி, செம்பு, பன்னீர்ச் செம்பு, சந்தனக் கும்பா, குங்குமச் சிமிழ், மண்ணெண்ணெய், இலுப்பெண்ணெய், வேப்பெண்ணெய்.
மேற்குறிப்பிடப்பட்ட சொற்பதங்களைவிட மேலும் பல வழக்கொழிந்துவருவதை, மூத்தோர் சிலராவது தமது வாழ்க்கை அனுபவங்கள் மூலம் மீட்டுப்பார்த்து ஞாபகப்படுத்திக்கொள்ள முடியும். அவற்றைப் பதிவு செய்வதன் மூலம் ஆய்வாளர்களுக்கு உதவமுடியுமென நம்புகின்றேன்.
- உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11-ம் சர்வதேச மாநாட்டு சிறப்பு மலர் பிரான்ஸ்
24 & 25 - O9 - 2011
உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி
உலகம் போற்றும் தமிழ்ப் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவுச் செய்தி, தமிழியல் ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள், B5 60) 60 இலக்கியவாதிகள் அனைவர்க்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துவிட்டது.
கடந்த நூற்றாண்டின் தமிழ்த்திறனாய்வு உலகில் இலங்கையினர் இரட்டையர்கள் எனப் பெயர் பெற்ற கைலாசபதி, சிவத்தம்பி ஆகிய இருவரையும் தமிழக ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் நிமிர்ந்து பார்க்கவேண்டிய நிலைவந்தது. மார்க்ஸிச நெறிவழி இவர்களது திறனாய்வுப் போக்குகள் , உருவமா - உள்ளடக்கமா? - வாதப்பிரதிவாதங்கள், தேசிய இலக்கியம், இழிசனர் இலக்கியம், முற்போக்குவாதம் முதலியன குறித்த வாதப்பிரதிவாதங்கள் போன்றவற்றில் இருவரும் தீவிர பங்குகொண்டு இலக்கிய உலகினை வியப்புடனர் பார்க்கவைத்தனர். பணி டித மரபுவாதிகளின் கடுந்தாக்குதல்களை எதிர் | கொண்டனர். இவர்கள் காட்டிய புதியபாதை வரலாறாகித் தொடர்கிறது.
பேராசானி கைலாசபதியோடு உறுதுணையாக நின்று, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினை வழிநடத்திச்சென்றார் பேராசிரியர் சிவத்தம்பி. தமிழ் அவைகளில், எந்த ஆய்வாளருக்கும், புலமையாளருக்கும் பதில் சொல்லும் ஆற்றல், ஆளுமையுள்ளவராக, நிகரற்ற பெருமனிதனாக அவர் விளங்கினார்.
அவரது அறிவுத்திறன், ஆற்றல், ஆளுமையை, 1981-ம் ஆண்டு தை மாதம் சென்னையில் சி. எல். எஸ்’ நடத்திய இலக்கியக் கருத்தரங்கின்போது என்னால் உணரமுடிந்தது. இலக்கியவாதிகள் நிறைந்திருந்த அவையிலே, அவர் தலைமைதாங்கி நடத்திய அமர்வில், மக்கள் எழுத்தாளர் கே. டானியலுடன் மேடையிலிருந்து கவனித்தது இன்றும் எனக்கு ஞாபகம்.
தோழமையைப் பெரிதாக மதித்த பெருமகன் அவர். கே. டானியல் காலமாகியபோது, ‘வரலாற்றைப் படைத்த நீ வரலாறாகிவிட்டாய். உன் மறைவால் நாங்கள் படும்வேதனை உனக்குத் தெரியும். தோழமையுணர்ந்த உனக்கு எங்கள் உணர்ச்சி புரியாதுவிடாது” என்றவாறு கண்ணிர் சிந்த எழுதியிருந்தார்.
அந்த உணர்வுதான், இன்று அவரை இழந்துள்ள கலை இலக்கியத் தோழர்கள் அனைவர்க்கும் உள்ளது, தஞ்சைப் பல்கலைக்கழகத்தில் அவர் சிறப்புப் பேராசிரியராகக் கடமையாற்றினார். அக்காலத்தில் தஞ்சையில் வாழ்ந்த பேராசிரியர் அ. மார்க்ஸ், பேராசிரியர் இராமசுந்தரம் போன்ற பலருடனர் அவர் நெருங்கிப் பழகியமையை அறிய முடிந்தது.
இன்று புகழ்பெற்ற ஆய்வாளராகவும், சிறந்த விமர்சகராகவும் பேராசிரியர் அ. மார்க்ஸ் விளங்குவதற்குப் பேரறிஞர் சிவத்தம்பியினர் வழிகாட்டுதல்களும் உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையிலும் இன்று புகழ்பெற்று விளங்கும் ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் பலரும் அவரினதும், பேராசான் கைலாசபதி அவர்களினதும் வழிகாட்டுதல்கள் வழிவந்தவர்களாவர்.
அறுபதுகளினர் நடுப்பகுதியில் அரசியல் கோட்பாட்டுவழி கம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தது. பின்னர் அதன் தாக்கத்தால் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் பிளவுற்றது. அரசியல்வழி பேராசிரியர் கைலாசபதி சீனச் சார்பினரானார். பேராசிரியர் சிவத்தம்பி ரஸ்ய சார்பினராகவே விளங்கினார்.
கே. டானியல், சில்லையூர் செல்வராசனர், எண். கே. ரகுநாதன் உட்படப் பலர் சீனச் சார்பினராக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்தும் வெளியேறினர். பேராசிரியர் சிவத்தம்பி தொடர்ந்தும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு உறுதுணையாக விளங்கினார்.
இறுதிக் காலத்தில் தமிழ்த் தேசியக் கோட்பாட்டுக்கு வலுச்சேர்ப்பவராக எழுதியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி.
இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவத்தம்பி. கடந்த தை மாதம் (2011) கொழும்பில் நடைபெற்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் சிறப்புரையாற்றியபோது அவரை இறுதியாகக் காணமுடிந்தது. அவரது இழப்பு தமிழ் ஆய்வுத்துறைக்கும், கலை இலக்கியத்துறைக்கும் பேரிழப்பாகி எல்லோரையும் கலங்கவைத்துவிட்டது.
பேராசிரியர் சிவத்தம்பியின் நூல்கள் சில . .
1. பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்.
2. இலக்கியமும் கருத்துநிலையும்.
3. பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி
4. தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி
5. யாழ்ப்பாணம் : சமூகம், பண்பாடு, கருத்துநிலை
6. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும்
7 ஈழத்தில் தமிழ் இலக்கியம்
8. அரங்கு ஒர் அறிமுகம்
9. தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
10. தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும்.
11. இலக்கியமும் வாழ்க்கையும்
12. இலக்கணமும் சமூக உறவுகளும்
13. நாவலும் வாழ்க்கையும்
14. தமிழில் இலக்கிய வரலாறு
15. கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கள்.
- 'தினக்குரல்" 0 - 07 - 2011